பிரத்யங்கிராதேவி கோயில்
Page 1 of 1
பிரத்யங்கிராதேவி கோயில்
மூலவர் - பிரத்யங்கிராதேவி
தல விருட்சம் - ஆலமரம்
பழமை - 1000-2000 வருடங்களுக்கு முன்பு
ஊர் - அய்யாவாடி
மாவட்டம் - தஞ்சாவூர்
திருமால் இராமாவதாரம் எடுத்து பூமிக்கு வந்த போது, சீதையை ராவணன் கடத்திச் சென்று விட்டான். இராமன் அவனுடன் போரிட இலங்கை சென்றார். தன் சகோதரர்களையும், மகன்களையும் வரிசையாக இராமனுடன் போரிட அனுப்பிய ராவணன், எல்லாரையும் இழந்தான். மிகுந்த பலசாலியான இந்திரஜித் ஒருவன் எஞ்சியிருந்தான்.
காளி பக்தனான அவன், இராமனைப் போரில் தோற்கடிப்பதற்காக காளியை வேண்டினான். மன்னர்கள் அக்காலத்தில் போரில் வெற்றி பெறுவதற்காக, எட்டுத்திசைகளிலும் மயான பூமியை தோற்றுவித்து அதர்வணகாளியான பிரத்யங்கிரா தேவிக்கு நிகும்பலா யாகம் நடத்துவார்கள். அந்த யாகத்தை இந்திரஜித்தும் பிரம்மாண்டமாக நடத்தினான்.
நிகும்பலா யாகம் மட்டும் முடிந்து விட்டால் இந்திரஜித் மாபெரும் சக்தியை அடைந்து விடுவான். அதன் பின் அவனைப் போரில் வெல்ல யாராலும் முடியாது. இந்த விஷயம் இராமனுக்குத் தெரிந்து விட்டது. இராமபிரானும் பிரத்யங்கிரா தேவிக்கு சிறப்பு பூஜைகள் செய்தார். இந்திரஜித் அநியாய வெற்றி பெறுவதற்காக யாகம் நடத்துவதையும், பரமாத்மாவான இராமன் நியாயத்திற்காக யாகம் நடத்துவதையும் அறிந்து கொண்டாள் பிரத்யங்கிரா.
இராமரின் யாகத்திற்கும், அவரது நியாயமான கோரிக்கைக்கும் செவி சாய்த்த தேவி அவருக்கு அருள் புரிந்தாள். தன் நீண்ட நாள் பக்தனாயினும், அநியாயத்துக்குத் துணைபோன இந்திரஜித்தின் பூசையை ஏற்க மறுத்துவிட்டாள். எனவே இந்திரஜித் போரில் தோற்றான். இருந்தாலும், தன் பக்தன் என்ற முறையில், அவனது வீரம் இராமாயணத்தில் புகழப்படும் வகையில் ஆசி தந்தாள்.
கோயில் விமானம் வடமாநில பாணியில் அமைக்கப்பட்டுள்ளது. பிரத்யங்கிரா தேவி தனி சன்னதி கொண்டு வடக்கு பார்த்து அருள்பாலிக்கிறாள். மூலவராக அகத்தீசுவரர் கிழக்கு நோக்கி உள்ளார். அம்மன் தர்மசம்வர்த்தினி தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். தலவிருட்சம் ஆலமரம். இதில் ஆல், அரசு, புரசு, இச்சி, மா இலைகள் இருப்பது விசேஷசம்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சிவக்கொழுந்தீஸ்வரர் கோயில்
» ஸ்ரீசிதம்பரேஸ்வரர் கோயில்
» மணிமூர்த்தீசுவரம் கோயில்
» மணிமூர்த்தீசுவரம் கோயில்
» தீர்த்தபாலீஸ்வரர் கோயில்
» ஸ்ரீசிதம்பரேஸ்வரர் கோயில்
» மணிமூர்த்தீசுவரம் கோயில்
» மணிமூர்த்தீசுவரம் கோயில்
» தீர்த்தபாலீஸ்வரர் கோயில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum