கிரக தோஷம் நீங்கும் சந்தன மகாலிங்கம் தீர்த்தம்
Page 1 of 1
கிரக தோஷம் நீங்கும் சந்தன மகாலிங்கம் தீர்த்தம்
சதுரகிரியின் மேல் `காளிவனம்' என்கிற வனப்பகுதி ஒன்றுள்ளது. அவ்வனத்திலிருந்து வருகிற தீர்த்தம் சந்தனமகாலிங்க தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. உமையாள் பிருங்க முனிவர் தம்மை வணங்காமல் ஈசனை வணங்கியமையால் ஏற்பட்ட கோபத்தின் காரணமாக் சிவபெருமானை விட்டுப்பிரிந்து, அமர்த்த நாரீஸ்வரர் என்கிற சிவசக்தி கோலத்தில் இருக்க வேண்டி சதுரகிரிக்கு வந்து லிங்கப் பிரதிஷ்டை செய்து அபிஷேகத்திற்கு வரவழைத்த ஆகாய கங்கையாகும்.
இப்புண்ணிய தீர்த்ததில் நீராடினால், எந்தப் பாவமும் நீங்கி முக்தி கிடைக்கும். இது தவிர, சதுரகிரியில் பார்வதி தேவியின் பணிப்பெண்களான சப்த கன்னியர்கள் தாங்கள் நீராடுவதற்கு உண்டாக்கிய `திருமஞ்சனப் பொய்கை' உண்டு. காலாங்கிநாதரால் உண்டாக்கப்பட்ட பிரம்மதீர்த்தம் ஒன்று சதுரகிரி மலைக் காவலராகிய கருப்பணசுவாமி சன்னதி முன்பாக இருக்கிறது.
இது தவிர கோரக்கர், ராமதேவர், போகர் முதலிய மகரிஷிகளால் உண்டாக்கப்பட்ட "பொய்கைத் தீர்த்தம்'' "பசுக்கிடைத் தீர்த்தம்'' குளிராட்டித் தீர்த்தம்'' போன்ற அனேக தீர்த்தங்கள் சதுரகிரி மலையில் உள்ளன. மகாலிங்கம் கோவிலிலிருந்து சாப்டூர் செல்லும் வழியில் உள்ள குளிராட்டி பொய்கையில் நீர் வற்றாது. இதில் குளித்தால் கிரக தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» திருமண தடை நீங்கும் திருவெண்காடு முக்குளத் தீர்த்தம்
» கிரக தோஷம் நீங்க பரிகாரம்
» கிரக தோஷம் விலக சக்கரத்தாழ்வார் வழிபாடு
» கிரக தோஷம் விலகும் சதுரகிரி தீர்த்தங்கள்
» தோஷம் நீங்கும் இறை வழிபாடு
» கிரக தோஷம் நீங்க பரிகாரம்
» கிரக தோஷம் விலக சக்கரத்தாழ்வார் வழிபாடு
» கிரக தோஷம் விலகும் சதுரகிரி தீர்த்தங்கள்
» தோஷம் நீங்கும் இறை வழிபாடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum