தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பூச நட்சத்திர தோஷ வழிபாடு

Go down

பூச நட்சத்திர தோஷ வழிபாடு Empty பூச நட்சத்திர தோஷ வழிபாடு

Post  meenu Sun Mar 24, 2013 1:20 pm

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பக்தி ஞானம் உடையவர்கள். நல்ல குணம் மிகுந்தவர்கள். எதிலும் நீதி, நியாயம் பார்ப்பவர்கள். வாக்கு தவற மாட்டார்கள். தன்னைப்போல் பிறரும் இருக்கவேண்டும் என விரும்புபவர்கள். தன்னால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்வார்கள். சிலர் யோசனை முறையில் தீவிர நாட்டம் உடையவராக இருப்பர். பூசம் நட்சத்திரத்தின் அதிபதி சனி.

இந்நட்சத்திரத்தின் முழுமையான நாழிகை 52. இந்நட்சத்திரக்காரர்களுக்கு உரிய தெய்வம் சாஸ்தா. பூச நட்சத்திரக்காரர்கள் சாஸ்தாவை வழிபட்டால் சகல யோகங்களும் பெறலாம். பட்டுக்கோட்டையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விளங்குளத்தில் அமைந்துள்ளது அட்சயபுரீஸ்வரர் கோவில்.

பூச புதன் நேசம் தரும் என்பது பழமொழி. புதன் என்பது சனீஸ்வரரைக்குறிக்கும், எமதர்மராஜன், தன் தந்தையான சனீஸ்வரனின் காலில் அடிக்க அது ஊனமானது. இதற்கு நிவாரணம் தேடி பல சிவத்தலங்களுக்கு அவர் சென்றார். இத்தலத்துக்கு வந்தபோது, விளாமரவேரில் கால் இடறி அருகில் உள்ள பள்ளத்தில் விழுந்தார்.

அவர் விழுந்த நாள் திருதியையும், பூச நட்சத்திரமும், சனி வாரமும் சேர்ந்த நன்னாளாக இருந்தது. அவர் விழுந்த இடத்தில் இருந்து, பல காலமாக மறைந்திருந்த பூச ஞானவாவி தீர்த்தம் சுரந்து சனீஸ்வரரை மேல் எழுப்பி கரை சேர்த்தது. அப்போது சிவபெருமான் அட்சயபுரீஸ்வரராக சனீஸ்வரருக்கு காட்சி தந்து, திருமண பாக்கியமும் தந்தார்.

சனீஸ்வரரின் ஊனம் நிவர்த்தி ஆனது. விளாமரம் இருந்ததாலும், தீர்த்தம் சுரந்ததாலும் இவ்வூர் விளங்குளம் ஆனது. பூச நட்சத்திர லோகத்தில் வசித்த பூச மருங்கர் என்ற சித்தர், சனீஸ்வரலோகத்திருக்கும் சனிவாரி தீர்த்தத்தை எடுத்து, பூமியில் பல கோயில்களில் உள்ள தீர்த்தங்களில் அதை சேர்ப்பார். அந்த தலங்களில் எல்லாம் சனீஸ்வரருக்கு முக்கியத்துவம் உண்டாயிற்று.

இந்த சித்தர் சூரிய லோகத்துக்கும் கூட தினமும் சென்று வரும் அரிய சக்தியை உடைய பிதர்சாய் என்னும் காக்கைகளுக்கு சற்குருவாக விளங்குகிறார். இவர் தினமும் இத்தலத்தில் வழிபாடு செய்வதாக ஐதீகம்.

பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்கள் நட்சத்திர தினம் மற்றும் திரிதியை திதி நாட்களில் சனி பகவானுக்கு அபிஷேகம் செய்து, எட்டு முறை சுற்றி வந்து வழிபட்டால் தீராத பிரச்சினைகள் எல்லாம் தீரும், உடல் நலக்குறைவு, கடன் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள், மன நிம்மதி வேண்டுபவர்கள், ஊனமுற்ற வர்கள், கால் சம்பந்தமான நோய் உள்ளவர்கள், திருமணத்தடை உள்ளவர்கள் விளங்குளம் சனீஸ்வரரை வழிபட்டு வரலாம்.

இங்கு சனீஸ்வர பகவான் மந்தா, ஜேஷ்டா என்ற மனைவியருடன் திருமண கோலத்தில் ஆதிபிருஹத் சனீஸ்வரர் என்ற பெயரில் அனுக்கிரக மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். அபிவிருத்தி நாயகியை வழிபட்டால் செல்வவளம் உண்டாகும்.

தைப்பூச வழிபாடு.......

நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரமாகும். தை மாதப் பூச நட்சத்திரம் பெரும்பாலும் பவுர்ணமியில் வரும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம். தைப்பூசத் தன்றுதான் உலகம் தோன்றியதாக ஐதீகம். சிவபெருமான் உமாதேவியுடன் இருந்து சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள் தைப்பூசம் என்பர்.

சிதம்பரத்திற்கு வந்து அரும்பெரும் திருப்பணிகள் செய்து, நடராஜரை இரணியவர்மன் என்னும் மன்னன் நேருக்கு நேராகத் தரிசித்தது இந்நாளிலேயே. இக்காரணங்களுக்காகவே சிவன் கோவில்களில் தைப்பூசத்தன்று சிறப்பு அபிஷேகங்களுடன் பூஜைகள் நடத்தப்படுகின்றன. தேவர்களில் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூசத்தன்று குரு வழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும் என்பர்.

வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் ஒரு தை மாத வெள்ளிக்கிழமை பூச நட்சத்திரத்தன்றுதான் சமாதியானார். இதனைக் குறிக்கும் விதமாக அவர் சமாதியான வடலூரில், தைப்பூசத்தன்று லட்சக்கணக்கானோர் கூடி வள்ளலார் விழாவைக் கொண்டாடுகிறார்கள்.

தைப்பூசத்தன்று அதிகாலை யில் எழுந்து குளித்து விட்டு திருநீறு, ருத்திராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபடுவர், தேவாரம், திருவாசகம் போன்ற வற்றைப் பாராயணம் செய்வர், உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால், பழம் சாப்பிடலாம். மாலையில் கோவிலுக்குச் சென்று சிவ பூஜையில் பங்கேற்று சிவனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்வர்.

சனி வழிபாடு........

அட்டமத்தில் சனி இருப்பவர்களும், பூச நட்சத்திரக்காரர்களும் ஏழறை ஆண்டு சனி இருப்பவர்களும் இந்த விரதத்தை மேற்கொள்ளுவதால் தொல்லைகள் குறைவதோடு நன்மையுண்டாகும். பெருமாளை வணங்கி நவக்கிரக சந்நிதியில் நவக்கிரகங்களை வலம் வந்து சனீஸ்வரனுக்கு எள்ளை துணியிலே கட்டி நல்லெண்ணெய் ஊற்றித் தீபம் ஏற்றி

முனிவர்கள் தேவரேமும் மூர்த்திகள் முதலியானார்கள்
மனிதர்கள் வாழ்வும் உன்றன் மகிமையது
அல்லால் உண்டோ கனிவுள தெய்வம் நீயே கதிர்சேய காகம் ஏறுஞ்சனியனே உனைத்துதிப்பேன் தமியே னுக்கருள் செய்வாயே!

என்று தோத்திரம் சொல்லி வணங்குவ தால் சகல துன்பங்களும் நீங்கப் பெற்று நீண்ட ஆயுள் கிடைக் கும். இந்த சனீஸ்வர விரதத்தை ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் அனுசரிக்க முடியாதவர்கள் புரட்டாசி மாதத்தில் வருகின்ற சனிக்கிழமைகளில் மட்டுமாவது அனுசரிக்கவேண்டும்.

செல்வம் தரும் சாஸ்தா..........

பூசம் நட்சத்திரக்காரர்கள் சாஸ்தா வழிபாடு நடத்தினால் சகல செல்வங்களையும் பெறலாம். அறிவிற் சிறந்த முன்னோர்கள் நம் தேசத்தின் முக்கியமான சாஸ்திர கருத்துக்களை அழகாக, அய்யப்பப் பூஜை வழிபாட்டு முறையில் வைத்துள்ளார்கள். சபரிமலைக்குச் சென்று செய்யும் அய்யப்பப் பூஜையானது. அனைத்து வழிபாடுகளையும், சாஸ்திர விஷரங்களையும் உள்ள டக்கியதாக இருக்கிறது.

பண்டிதர்கள் அறிந்த விசயத்தைப் பாமரரும் அறியும் வண்ணம் அழகாக இந்த பூஜையில் நம் பெரியோர்கள் வடிவமைத்திருக்கிறார்கள். இதுபோன்ற ஓர் அற்புதமான வாழிபாட்டு முறையைக் காண்பது அரிது. அய்யப்பன் வழிபாட்டில் பல தத்துவங்கள் அடங்கி இருக்கின்றன. மாலை போட்டுக் கொண்டு 48 நாட்களுக்கு விரதம் இருத்தல், நாள் தோறும் வழிபடுதல், உணவு கட்டுப்பாடு முதலிய பல விஷயங்கள் உள்ளன.

சபரிமலைக்கு பக்தியோடு கிளம்பிச் செல்லுதல், பார்ப்பவர்களை எல்லாம் சுவாமி என்று அழைத்தல், பெண்களை மாளிகைபுரம் என்று கூறுதல் என நம்முடைய பாவனை மாறுவதை கவனிக்கவேண்டும். சில நாட்களுக்கு முன்னர் அவன், இவன் என்றெல்லாம் பேசியதை நீக்கி விட்டு, சுவாமி என்கிறோம். குருவுக்கெல்லாம் குருவாக, ஆதி குருவாக விளங்குபவர் அய்யப்பன்.

(என் குரு நாதனே சரணம் அய்யப்பா) சாமியைக் கண்டால் மோட்சம் கிட்டும் என்று சொல்கிறோம். மோட்சம் என்றால் நிம்மதி என்று அர்த்தம். என்ன துன்பம் வந்தாலும் நம் மனதில் நிம்மதியை இழக்காமல் இருக்கும் நிலைக்குதான் மோட்சம் என்று பெயர். மோட்சம் என்றால் இறந்த பிறகு அடைவதல்ல. இப்போதே நிம்மதியாக இருக்கும் நிலை தான் மோட்சம். என்றோ ஒருநாள் நிம்மதி வரப்போகிறது என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அது வரப்போவதில்லை. நீங்கள் நிம்மதியாக இருக்கப் பழகவில்லை என்றால் நிம்மதி ஒரு நாளும் வராது. நிம்மதி வரவேண்டும் என்றால் இரண்டு காரியங்கள் செய்யவேண்டும். 1. விடாமல் புண்ணியம் செய்யவேண்டும். 2. உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும். அய்யப்பனுக்கு தர்ம சாஸ்தா என்று பெயர். அய்யப்பனின் ஒரு கை வரமளிக்கிறது. மற்றொரு கையில் சின்முதிரை இருக்கிறது. கட்டை விரல் பரமாத்மாவாகிய கடவுளைக் குறிக்கிறது.

ஆள் காட்டி விரல் ஜீவாத்மாவாகிய உயிரைக் குறிக்கிறது. அது கடவுளை விட்டு எப்போதும் தள்ளியே இருக்கிறது. நம் மனம் சில நேரத்தில் அமைதியாகவும், சில நேரம் பரபரப்பாகவும், சில நேரம் மந்தமாகவும் இருக்கும். ஜீவாத்மா எப்பொழுதும் இவற்றோடு சேர்ந்திருக்கிறது. ஜீவாத்மா உலகை நோக்கியே சென்று கொண்டிருப்பதால் நிம்மதி இழந்து காணப்படுகிறது.

ஜீவாத்மா பரமாத்மாவோடு இணைந்து விட்டால் நிம்மதி தானாக ஏற்படும். `எந்த ஓர் ஆனந்தத்தை தேடி கொண்டு நீ என்னிடம் வருகிறாயோ, அந்த ஆனந்தம் நீயே அய்யப்பா' என்று அய்யப்பன் சொல்கிறார். நம்மை அவர் அய்யப்பா என்று அழைக்கிறார். `நீயே நான், நானே நீ, நீ வேறு நான் வேறு அல்ல.

நீயே ஆனந்தம் நீ என்னைத் தேடி வருகிறாய். நான் உன்னை விட்டு ஒரு பொழுதும் பிரியவே இல்லை. நான் சபரிமலையில் எங்கோ ஒரு மூலையில் இருப்பவன் என்று நினைத்தாயா நான் எங்கும் நீக்கமற நிறைந்தவன்'. இங்கிருந்து கிளம்பி சபரிமலைக்குச் சென்று அய்யப்பனை தரிசிப்பது மட்டும் குறிக்கோள் அல்ல. இந்தப் பயணமே ஆனந்தம்.

விரதமே ஆனந்தம். மாலை போடுவதே ஆனந்தம். இருமுடி கட்டுவதே ஆனந்தம். கிளம்பி சபரிமலை நோக்கிப் பயணிப்பதும் ஆனந்தம். எப்பொழுதும் எதற்காகவும் நாம் அழவேண்டிய அவசியமில்லை. எப்பொழுதும் சந்தோஷமாக இருப்பதற்காகத்தான் பிறந்திருக்கிறோம். எதைப்படிக்க வேண்டுமோ, அதைப் படிக்காததால் நாம் துன்பப்படுகிறோம்'. படிக்க வேண்டியதைப் படி, அந்த ஆனந்தம் நீ தான்' என்பதைதான் அய்யப்பன் சொல்லிக் கொடுக்கிறார்.

தர்மத்தை கற்று கொடுப்பவர் தான் அய்யப்பன். மெய்ஞானத்தைக் கற்றுக் கொடுப்பவர் அய்யப்பன். பூச நட்சத்திரக்காரர்கள் அய்யப்பனின் மூல மந்திரமாகிய சுவாமி சரணம் என்பதை ஓதிக்கொண்டே இருங்கள். காரிய தடை நீங்கி சகல யோகங்கள் பெறலாம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum