தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அட்சய திருதியையில் அதிர்ஷ்டம் பெற 27-நட்சத்திர யோக வழிபாடு...!

Go down

அட்சய திருதியையில் அதிர்ஷ்டம் பெற 27-நட்சத்திர யோக வழிபாடு...! Empty அட்சய திருதியையில் அதிர்ஷ்டம் பெற 27-நட்சத்திர யோக வழிபாடு...!

Post  ishwarya Thu May 23, 2013 11:55 am

ஒவ்வொரு வருடமும் சித்திரை மாத அமாவாசைக்குப் பிறகு மூன்றாம் நாள் வருகின்ற திருதியை திதியே அட்சய திருதியை என்று மக்கள் கொண்டாடுகின்றனர். அட்சய என்பதற்கு குறைவில்லாமல் வளர்வது என்று ஒரு பொருள் உண்டு. அட்சய திருதியை என்னும் சுபநாள் இந்த ஆண்டு மிக வித்யாசமாகப் பிரிந்து வருகிறது.

அதாவது மே 12-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை திருதியை திதி 9.46 மணிக்கு வந்து விடுகிறது. எனவே அன்று அட்சய திருதியை புண்ணிய காலமாகக் கொண்டாட வேண்டும். அன்றைய தினம் குருநாதர்கள் சந்திப்பு, குல தெய்வ வழிபாடு பிற புதிய பொருட்களை வாங்குதல், தானமிடல் ஆகியவற்றைச் செய்யலாம்.

மறுநாள் திருதியை திதி காலை 11.46 வரை இருப்பதால், மே 13-திங்கள் அன்று புது நகைகள் வாங்குவது, பூமியை வாங்க திட்டமிடுவது ஆகியவற்றைச் செய்யலாம். உதய காலத்தில் திதி இருக்கும் மே 13-ந்தேதி திங்களன்று பொன்னகை வாங்குதல், ஒப்பந்தம் செய்வதை தொடங்கலாம்.

முதல் நாளான மே 12 ஞாயிற்றுக்கிழமையை அதிஷ்ட தினமாகக் கருதி தங்களுக்கு வேண்டிய யோகங்கள் கிடைக்க எதிர்காலம் வளமாக அமைந்திட வீடு நிலம், பொன் அதிஷ்ட கல் வாங்க, வங்கி கணக்கு தொடங்க, புதிய சேமிப்பை இறுத்திட சிறந்த நாளாக வருகிறது.

வங்கிகள் ஞாயிறன்று விடுமுறை என்பதால் பணத்தை எடுத்து வைத்து மறுநாள் செலுத்தலாம். அட்சய திருதியை புண்ணிய காலத்தில் சூரியன் நடுவானத்தில் வரும் போது உச்சிக்காலத்தில் அன்னதானம் செய்தால் மரண காலமும் விலகிச் சென்று புதுவாழ்வு கிடைக்கும் என்கிறது நீதி சாஸ்திரம்.

கேரள தேசத்தை ஸ்தாபனம் செய்த ஸ்ரீ பரசுராமர், உலகின் தந்தையான சூரிய பகவானும், தாயான சந்திரனும் உச்சம் பெறும் நாளை யோகதினமாகக் கொண்டாட வேண்டும் என்கிறார்.

ஞாயிற்றுக்கிழமை அட்சய திருதியை புண்ணியகாலமாக வருவதால் அன்று காலை சுப வேளையில் எட்டு சோழிகளை பூஜை அறையில் குத்து விளக்கு முன்பு அலங்காரமாக வைத்து யோக லட்சுமி பூஜை செய்த பிறகு வீட்டின் எட்டு திக்குகளிலும் புதைத்து விட்டால் அவை மகாமேருச் சக்கரம் போலச் செயல்பட்டு- சக்கரந் தூண்டலாகி வீட்டில் பெரும் செல்வச் சேர்க்கையை உண்டு பண்ணிவிடும்.

அன்றைய தினம் ஆல மர இலை மேல் 5ஜ்5-25 அறைகள் உடைய சிதம்பர சக்கரத்தை வரைந்து `திரியம்பகம் யஜாமகே - பாம்ருதாத்' மந்திரத்தை 108 முறை ஜெபம் செய்து வீட்டின் படுக்கை அறைக்குள் வைக்க, கண்திருஷ்டி, ஏவல்கள் விலகி ஓடும். திருதியை திதியில் செய்யும் காரியம் விருத்தி என்பது சொல் வழக்கம். இது வளர்பிறை திதியாக இருத்தல் வேண்டும்.

மூன்றாம் பிறை தெரிகிற தினமான வளர்பிறை திருதியை திதியில் எந்த சுபச் செயல்கள் செய்தாலும் விருத்தி தரக்கூடிய பலன்களே ஏற்படும் என்பதற்கு ஒரு உதாரணம் இருக்கிறது. திருமணமாகாத கன்னிப் பெண்கள் வயல்களில் எருவைத் தூவி மூன்றாம் பிறையை வழிபட்டு வரும் வழக்கம் பண்டைக் காலத்திலிருந்தே வழக்கத்தில் இருந்ததாக ஆசாரக் கோவை என்னும் நூல் கூறுகிறது.

மூன்றாம் பிறை காண்பதை அதிஷ்டமாகக் கருதி பார்த்து தரிசித்து விட்டு அம்மனை தொழுது செயல்களைத் தொடங்கினால் வெற்றி கிடைக்கும் என்பது பெரியவர்களது கருத்து. அட்சய திருதியை கொண்டாடுவதற்குச் சில பஞ்சாங்க விதிகள் உள்ளன. சூரிய உதய காலத்தில் திருதியை திதி இருந்தாக வேண்டும்.

குறிப்பாக பிற்பகல் 1 மணி 12 நிமிடங்களிலிருந்து 3.36 மணி வரை இந்த திதி இருத்தல் அவசியம் இன்று தானம் செய்வதால் அறியாமல் செய்த பாவங்கள், தோஷங்கள் அகன்று நலம் உண்டாகும்.

அட்சய திருதியை புண்ணிய காலத்தில் வழிபாடு 27 நட்சத்திரங்களில் பிறக்கும் மனிதர்கள் ஒவ்வொருவரும் இந்த ஆண்டு முதல் அவரவர்களுக்கு உரிய ஜென்ம அதி தேவதைகளை வழிபட்டு நலம் அடையலாம்.

மே 12-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலையில் குளித்து மடியுடுத்திக் கொண்டு நட்சத்திர தேவதைகளையும், குல தெய்வத்தையும் வணங்கி விட்டால் வாழ்வில் புதிய திருப்பங்களோடு வளங்கள் சேரும். அதற்கான அதிதேவதை மூல மந்திர வரிகள் வருமாறு: இதை 108 தடவை கூறி வழிபட வேண்டும்.

அஸ்வனி-ஓம் அஸ்வினி தேவாய நம
பரணி-ஓம் யமாய தர்மரா நம
கார்த்திகை-ஓம் ஸ்ரீம் அக்னயே தர்ம ரூபாய நம
ரோகிணி- ஓம் பம் பிரஜாபதி ரூபனே நம
மிருகசீர்ஷம்- ஓம் சாம் சோம தேவாய நம
திருவாதிரை- ஓம் ஸ்ரீம் ருத்ர மூர்த்தியே நம
புனர்பூசம்- ஓம் அம் அதிதி தேவாய நம
பூசம்-ஓம் ஸ்ரீ கணபதி தேவனே நம
ஆயில்யம்-ஓம் சம் சர்ப்பராஜாய நம
மகம்-ஓம் பிதர தேவாய நம
பூரம்-ஓம் ஆம் அர்ய மாய நம
உத்திரம்-ஓம் பகநேத்ராய நம
அஸ்தம்-ஓம் சம் ஜித்ராய நம
சித்திரை-ஓம் துவஷ்ட மூர்த்தியே நம
சுவாதி-ஓம் வம் வாயு தேவாய நம
விசாகம்-ஓம் இந்திராக் னயே நம
அனுஷம்-ஓம் மாம் மித ராய நம
கேட்டை-ஓம் இம் இந்தி ராய நம
மூலம்-ஓம் பிரஜாபதயே நம
பூராடம்-ஓம் ஆம் ஆப தாய நம
உத்திராடம்-ஓம் விஸ் வே தேவாய நம
திருவோணம்-ஓம் விஷ்ணு பதயே நம
அவிட்டம்-ஓம் வம் வசு தேவ நம
சதயம்-ஓம் வம் வருண ருபனே நம
பூரட்டாதி-ஓம் அம் அஜ ஏகபதயே நம
உத்ரட்டாதி-ஓம் ஆம் அகிர் புதாய நம
ரேவதி-ஓம் பும் பூஷ தேவியை நம

தனி நபர்களுக்கு 27 நட்சத்திர வழிபாடு இருப்பதைப் போல அட்சய திருதியை முதல் 12 மாத தெய்வ வழிபாடு செய்வதால் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு அவர்களது வாழ்க்கையில் யோகங்கள், அதிர்ஷ்டங்கள் கைகூடி வரும்.

ஒருவர் எந்த மாதத்தில் பிறந்திருந்தாலும் அட்சய திருதியை நாளில் அந்த மாதத்திற்கு உரிய தெய்வத்தை வழிபட்டால் நல்ல எதிர்காலம் உருவாகும். சித்திரை- ஓம் மது தெய்வமே கருணை வேண்டினோம். மது, சங்கு சக்ரதாரியே வெற்றிகள் தருவாய்.

வைகாசி- மாதவர்- இம்மாதம் பிறந்தவர்க்கான தெய்வம். ஓம் மாதவ உருவினனே கருத்பத் என்ற அறிவுடையோனே சாரங்க வலில்லால் சகல தடையும் களைவாய். ஆனி-சுக்ரர்- பிரம்ம சூத்ரம் எனும் பூணூல் அணிந்தால், சுகந்தரமாய் வாழ்வைத் தருவாய் சுக்ரதேவே.

ஆடி-சுசி பன்னகப் பாம்பின் வாகனரே நான்கு கையனாய் எண்ணம் நிறைவேற்றும் ஏந்தவாம் சுசி தேவா. ஆவணி- நமோ நான்முகத்தானாகி வராகனை வாகனராக்கி மனவிருப்பம் நிறைவேற்றும் பாதேவ வணக்கம். புரட்டாசி- நபஸ்யர்- பத்துக் கையுடையாய் பாம்பினை அணிந்த மூலா எத்திக்கம் என் பெயர் சேர ஏற்றம் தர வாராய்.

ஐப்பசி- கிஷார்- ஆறுமுகத்துடையால் அட்டமாசித்தி கொண்டாய் திட்டம் வந்து சேர இடநாமத் தெய்வமே வருவாய். கார்த்திகை- ஊந்ஜர்-மூன்று கண்ணுடையாய் முகம் பொலிவுடையாய் என்றும் வளமே காண தேரில் வந்து காக்க. மார்கழி- சகர்-சூலம் ஏந்தியவா, காளையை வாகனமாக்கி கருத்தினில் வந்து தித்து காலமதை உருவாக்க.

தை- அகஸ்யர்- சாரிக வாகனத்தாய் கத்தியும் கேடயமும் கொண்ட ஐஸ்வர்ய கரமுடைத்தாய் கண் முன்னே வந்து நிற்பாய். மாசி- தபோ-சந்திர முகப்பொலிவாய் சுகமே உருவானாய் எந்த நேரத்திலும் நல்வாழ்வை முடுக்கிவிட நீ வாராய்.

பங்குனி- தபஸ்யர்- வண்ண நிறத்துடையாய் லட்சுமி உருவானாய் எண்ணம் வளர்த்து விடும் பிரம்ம வடிவே அருள் தருக.-பன்னிரு மாதங்களில் பிறந்தவர்களும் இதைத் தங்கள் வீட்டு பூஜை அறையில் 6 முறை சொல்லி அட்சய திருதியை புண்ணிய காலத்தில் வழிபடலாம். குறைவற்ற செல்வமும் நோயற்ற உடலும் இறைவன் இந்த புண்ணிய நாளில் அருளட்டும்.

-ரி.குமாரசிவாச்சாரியர். 91765 39026

இலவச மந்திரதுதி..... அட்சய திருதியை புண்ணிய காலத்தில் எல்லோருக்கும் பயன்படும்படி 12 ராசிக்கு உரிய மந்திரக் கூறுகளை மே 12 ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை வரை அட்சய திருதியை புண்ணிய காலத்தை முன்னிட்டு எல்லோருக்கும் செப்புத்தகட்டில் எழுதிக் கொடுக்க உள்ளேன்.

மே 12- ஞாயிறு, மே-13 அட்சய திருதியை நாளில் வாசகர்கள், தெய்வப்படம் நட்சத்திர காயத்ரிகள், மாத தெய்வ மந்திரம் மற்றும் ராசி மந்திரத் துதியை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum