தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வதந்திகளை இனியும் நம்பாதீர்கள்: காஜல்

Go down

வதந்திகளை இனியும் நம்பாதீர்கள்: காஜல் Empty வதந்திகளை இனியும் நம்பாதீர்கள்: காஜல்

Post  ishwarya Sat Mar 23, 2013 6:24 pm



தெலுங்கு திரையுலகி்ல் நடிகர் மகேஸ்பாபு மற்றும் காஜல் அகர்வால் இணைந்து நடித்து வெளியான பிஸினஸ்மேன் படம் வெற்றியடைந்துள்ளது. ஆனால் இப்படம் வெளியான மறுநாளே காஜலலைப் பற்றி நிறைய வதந்திகள் பரவியுள்ளன. இதற்கு காரணம் அவர் புத்தாண்டு தினத்தன்று நடிகர் பிரபாஸுடன் தான் பொழுதைக்கழித்ததாக தகவல்கள் வெளியாயின.

இதனைப் பற்றி காஜல் கூறுகையில், என்னுடைய திரைப்படங்கள் பெரும் வெற்றியடையும் நேரங்களில் ஏதாவது ஒரு வதந்தியைக் கிளப்பி விடுகிறார்கள். நான் பாங்காக் செல்லவே இல்லை என்ற போது எப்படி பிரபாஸுடன் புத்தாண்டை கொண்டாட முடியும்.

திரைப்படத்தில் வரும் கனவுக்காட்சிகளைப் போன்று வதந்திகளை பரப்பும், இவர்களுக்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டியதில்லை என்றாலும் என் ரசிகர்களுக்காக ஒன்று சொல்லி கொள்கிறேன். புத்தாண்டு அன்று என் குடும்பத்தாருடன் தான் இருந்தேன், இப்படிப்பட்ட வதந்திகளை இனியும் நம்பாதீர்கள் என்று கூறியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum