ஊதியத்தை உடனடியாக பேசி முடிக்க வேண்டும்: பெப்ஸி உண்ணாவிரதத்தில் தீர்மானம்
Page 1 of 1
ஊதியத்தை உடனடியாக பேசி முடிக்க வேண்டும்: பெப்ஸி உண்ணாவிரதத்தில் தீர்மானம்
சென்னை, பிப். 5: பெப்ஸி தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்தை உடனே பேசி முடிக்க வேண்டும் என பெப்ஸி தொழிலாளர்கள் நடத்திய உண்ணாவிரதத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை பெப்ஸி தொழிலாளர்களுக்கான சம்பளம் உயர்த்தப்படுவது வழக்கம். இந்நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தோடு 8-வது ஊதிய ஒப்பந்தம் முடிந்த நிலையில், புதிய ஒப்பந்தம் ஏற்படுவதில் இழுபறி நீடித்து வருகிறது.இதனால் பல திரைப்படங்களின் படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. பெப்ஸி - தயாரிப்பாளர் சங்கங்களின் இடையேயான சம்பளப் பிரச்னையில் தீர்வு ஏற்பட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இரு சங்கங்களும் கோரிக்கை வைத்துள்ளன.
இந்நிலையில் பெப்ஸி அமைப்பின் சார்பில் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. பெப்ஸி அமைப்பின் 24 சங்கங்களின் சார்பில் நடைபெற்ற இப்போராட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பங்கேற்றனர். சென்னை வடபழனியில் உள்ள திரை இசைக் கலைஞர்களின் சங்க வளாகத்தில் காலை 9 மணிக்கு தொடங்கிய உண்ணாவிரதம் மாலை 5 மணிக்கு முடிவடைந்தது.
பெப்ஸி அமைப்பின் தலைவர் எம்.ஏ.ராமதுரை, பொதுச்செயலாளர் ஜி.சிவா, பொருளாளர் அங்கமுத்து சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகளும், ஆந்திரம், கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பெப்ஸி அமைப்பின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
இயக்குநர்கள் அமீர், எஸ்.பி.ஜனநாதன், எஸ்.எஸ்.ஸ்டேன்லி, பெப்ஸியின் முன்னாள் தலைவர் பெப்ஸி விஜயன் உள்ளிட்டோரும் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர்.
உண்ணாவிரதத்தில் பேசிய பலர், திரைப்படத் தொழிலாளர்களுக்கு சட்டப்படி வழங்க வேண்டிய சம்பளத்தைத்தான் கேட்கிறோம். அதை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினர்.
தீர்மானங்கள்: ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் குடும்பங்களைக் காப்பாற்றும் வகையில் தமிழக அரசு இப்பிரச்னையில் தலையிட வேண்டும். தொழிலாளர்களின் நன்மைக்காக தயாரிப்பாளர்கள் சங்கம் உடனடியாக ஊதியத்தைப் பேசி முடிக்க வேண்டும். பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ள நடிகர் சங்கத்துக்கு நன்றி. தனி குழு அமைத்து பேசி முடிக்க முடிவெடுத்துள்ள இயக்குநர் சங்கத்துக்கு நன்றி என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் உண்ணாவிரதக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
உண்ணாவிரதத்தை நிறைவு செய்து பெப்ஸி அமைப்பின் முன்னாள் தலைவர் என்.எஸ்.வர்மா பேசினார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஊதியத்தை உடனடியாக பேசி முடிக்க வேண்டும்: பெப்ஸி உண்ணாவிரதத்தில் தீர்மானம்
» ஜனவரி 7-ம் தேதி உண்ணாவிரதத்தில் பங்கேற்காத நடிகர் நடிகைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
» அஜீத் நிபந்தனையற்ற வருத்தம் தெரிவிக்க வேண்டும்… ரஜினிக்கு கண்டனம்! – சினிமா சங்கங்கள் தீர்மானம்
» உண்ணாவிரதத்தில் காலில் கட்டுடன், அஜீத்
» பெப்ஸி சம்பளப் பிரச்னைக்கு உடனடி தீர்வு
» ஜனவரி 7-ம் தேதி உண்ணாவிரதத்தில் பங்கேற்காத நடிகர் நடிகைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
» அஜீத் நிபந்தனையற்ற வருத்தம் தெரிவிக்க வேண்டும்… ரஜினிக்கு கண்டனம்! – சினிமா சங்கங்கள் தீர்மானம்
» உண்ணாவிரதத்தில் காலில் கட்டுடன், அஜீத்
» பெப்ஸி சம்பளப் பிரச்னைக்கு உடனடி தீர்வு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum