அஜீத் நிபந்தனையற்ற வருத்தம் தெரிவிக்க வேண்டும்… ரஜினிக்கு கண்டனம்! – சினிமா சங்கங்கள் தீர்மானம்
Page 1 of 1

உண்மையற்ற பேச்சுக்காக அஜீத் நிபந்தனையற்ற வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று சினிமா அமைப்புகளின் கூட்டு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அஜீத்துக்கு ஆதரவு அளித்ததற்காக ரஜினிகாந்துக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் இந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழக அரசு செய்து வரும் சலுகைகளுக்காக தமிழ் சினிமாக்காரர்கள் ஒருங்கிணைந்து முதல்வர் கருணாநிதிக்கு கடந்த பிப்ரவரி 6-ம் தேதி பாராட்டு விழா நடத்தினர். இதில் பங்கேற்றுப் பேசிய அஜீத், விழாக்களில் பங்கேற்க வருமாறு மிரட்டி அழைப்பதாக வேதனை தெரிவித்தார். அவரது இந்தப் பேச்சுக்கு முதல்வர் பக்கத்தில் அமர்ந்திருந்த ரஜினிகாந்த் எழுந்து நின்று கைதட்டி ஆதரவு தெரிவித்தார்.
எதார்த்தமான இந்த நிகழ்வை பெரும் அரசியலாக்கிவிட்டனர் சில நடிகர்கள், பெப்ஸி தலைவர் குகநாதன், வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் ஜி சேகரன் மற்றும் திருமாவளவன் போன்றோர். இடையில் புகுந்து பெரும் பப்ளிசிட்டியைத் தேடிக் கொண்டார் ஜாகுவார் தங்கம் என்ற ஸ்டன்ட் நடிகர்.
இதனிடையே திரையுலகில் சமரசம் காண அனைத்து சங்கங்களையும் ஒருங்கிணைத்து இன்று பிலிம்சேம்பரில் சமரசக் கூட்டம் நடத்தினார் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன்.
இதில் நடிகர் சங்கம் சார்பில் பொதுச்செயலாளர் ராதாரவி, விநியோகஸ்தர் சங்கத் தலைவர் கலைப்புலி சேகரன், பெப்சி தலைவர் வி.சி.குகநாதன், சிவா, எடிட்டர் மோகன், சத்திய ஜோதி தியாகராஜன், ஆர்.கே.செல்வமணி, மாதேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அஜீத் பேச்சு பற்றி கூட்டத்தில் காரசாரமாக பேசப்பட்டது. ஒற்றுமையாக எவ்வாறு செயல்படுவது என்றும் விவாதிக்கப்பட்டது.
பின்னர் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:
தமிழ் திரையுலகின் சார்பில் கடந்த பிப்ரவரி 6-ம் தேதி நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்ற நடிகர் அஜீத்தின் உண்மையற்ற பேச்சு கலையுலகினர் அனைவரையும் மனம் புண்படச் செய்துவிட்டது. எனவே அவர் நிபந்தனையற்ற வருத்தம் தெரிவித்தாக வேண்டும்.
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல அஜீத்தின் அந்தப் பேச்சு நடந்த பல நாட்களுக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் அஜீத்தின் தைரியத்தைப் பாராட்டுவதாக தெரிவித்தார். பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களை இது புண்படுத்திவிட்டது.
இதனால் அஜீத்துக்கும் ரஜினிகாந்துக்கும் ரெட் கார்டு போடும் அளவுக்கு நிலைமை மோசமானது. தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கம் தலையிட்டு நிலைமையை சுமூகமாக்க முயன்றது. அதன் அடிப்படாயில் ரஜினிகாந்துக்கு கடும் கண்டனம் தெரிவிக்க முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையிலேயே இப்போதைய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த கண்டன அறிக்கையில் அனைத்து நிர்வாகிகளும் கையெழுத்திட்டுள்ளனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ‘தண்ணிப் பேச்சு’க்கு வருத்தம் தெரிவிக்க மறுத்த த்ரிஷாவுக்கு சரக்கு பாட்டில்கள் பார்சல்!!
» மது அருந்தும் காட்சிக்கு வருத்தம் தெரிவிக்க மறுப்பு: நடிகை திரிஷா மீது பா.ம.க. வக்கீல் போலீசில் புகார்
» அஜீத் விவகாரம்: தயாரிப்பாளர் சங்கம் மன்னிப்பு தெரிவிக்க சரத் வலியுறுத்தல்
» வாக்குரிமை பற்றிய முக்கியத்துவத்தை வாக்காளர்களுக்கு பத்திரிகைகள் தெரிவிக்க வேண்டும் : தேர்தல் ஆணைய இயக்குனர் அக்ஷய் ராவத் பேச்சு
» சேவை வரிவிதிப்பு: நடிகர் அஜீத் கண்டனம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum