பழைய திரைப்படங்களைப் பாதுகாக்க அரசு நிதி ஒதுக்க வேண்டும்: கமல்ஹாசன்
Page 1 of 1

சென்னை, டிச. 2: தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் உள்ள பழைய திரைப்படங்களைப் பாதுகாக்க அரசு நிதி ஒதுக்க வேண்டும் என ஃபிக்கி அமைப்பின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்தார்.
இந்தியத் தொழில் வர்த்தகக் கூட்டமைப்பின், ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு தொழில் வர்த்தக (ஃபிக்கி) கருத்தரங்கு சென்னையில் இரண்டு நாள்கள் (டிசம்பர் 1, 2) நடைபெற்றது. கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. இதில் கலந்துகொண்ட கமல்ஹாசன் பேசியது:
இந்தக் கருத்தரங்கில் சினிமாவின் தொழில்நுட்பம் குறித்து மட்டுமல்லாமல் இன்றைய சூழ்நிலையில் திரைப்படத்துறை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் பல்வேறு விஷயங்களைப் பற்றி விவாதங்கள் இடம்பெறறன.
ஃபிக்கி உறுப்பினர்களுக்கும் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்குமான கலந்துரையாடல் மிகவும் ஆரோக்கியமாக அமைந்தது.
இதில் முக்கியமாக தணிக்கைச் சான்றிதழ் வழங்கும் மத்திய தணிக்கைக் குழு அமைப்பு என்ற பெயரை மத்திய திரைப்படச் சான்று வழங்கும் அமைப்பு என மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். அதே போல தணிக்கைக் குழு அமைப்புக்கு "கத்தரிக்கோல்' படம்தான் இலச்சினையாக உள்ளது. அதையும் மாற்ற வேண்டும் என்ற எங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது.
ஃபிக்கி அமைப்பு இதுவரை சுமார் 3500 பழைய திரைப்படங்களைப் பாதுகாத்து டிஜிட்டல் மயமாக்கும் வசதியைச் செய்துள்ளது. இதற்காக ஆன பெரும் பொருள் செலவை ஃபிக்கி அமைப்பே ஏற்றுக்கொண்டது. ஆனால் இனி, பழைய திரைப்படங்களைப் பாதுகாக்க அரசு போதிய நிதியுதவி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பழைய படங்களை பாதுகாக்க வேண்டும் : கமல் வேண்டுகோள்!!
» ஷாருக்கானுக்கு இந்திய அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும்: பாகிஸ்தான் மந்திரி சொல்கிறார்
» 25ஆயிரம் தொழிலாளர்களின் வாழ்வை தமிழக அரசு காப்பாற்ற வேண்டும் : பெப்சி கோரிக்கை…!
» கேளிக்கை வரியைக் குறைக்க வேண்டும்: கமல்ஹாசன்
» கலாசார தீவிரவாதம் நிறுத்தப்பட வேண்டும்: கமல்ஹாசன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum