"டேம் 999' இசையமைப்பாளருக்கு வாழ்த்து: வருத்தம் தெரிவித்தார் ஏ.ஆர்.ரஹ்மான்
Page 1 of 1

சென்னை, டிச. 26: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக சர்ச்சையை ஏற்படுத்திய "டேம் 999' பட இசையமைப்பாளருக்கு வாழ்த்து தெரிவித்ததில் உள்நோக்கம் எதுவும் இல்லை; தன்னுடைய செயல் தமிழர்களின் மனதைப் பாதித்திருந்தால் அதற்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆக்ராவில் அண்மையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் "டேம் 999' பாடல்கள் ஆஸ்கர் விருது தேர்வுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருப்பது பற்றி குறிப்பிடும்போது சக இசையமைப்பாளர் என்ற முறையில் படத்தின் இசையமைப்பாளரான ஆவுஸ் பச்சனுக்கு வாழ்த்து தெரிவித்தேன்.
ஆனால் இதை சிலர் வேறு விதமாக திசை திருப்பத் தொடங்கியுள்ளனர். இது மிகவும் வருத்தமளிக்கிறது. கடந்த சில மாதங்களாக ஹாலிவுட் பட பணிகளுக்காக அமெரிக்காவிலேயே இருந்துவிட்டதால் முல்லைப் பெரியாறு பிரச்னை எந்த அளவுக்கு தீவிரமானது என்பதை உணரவில்லை.
இந்தியாவின் வேகமான வளர்ச்சியைப் பார்த்து இன்று உலகமே வியக்கிறது. அதற்கு முக்கியக் காரணம் நமது ஒற்றுமையே. தமிழனாகிய என் வளர்ச்சியில் தமிழக மக்கள் மிகவும் உறுதுணையாகவும் முக்கியத் தூணாகவும் இருந்து வருகிறார்கள். அதற்கு நான் என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன். "டேம் 999' இசையமைப்பாளரை பாராட்டியது தமிழர்களின் மனதை பாதித்திருந்தால் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வருத்தம் தெரிவித்தார் ஆர்யா!
» தெரியாம நடிச்சுட்டேன்! – வருத்தம் தெரிவிக்கும் டேம் 999 பட நாயகி விமலா ராமன்
» ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள பாம்பே ஜெயஸ்ரீக்கு ஏஆர் ரஹ்மான் வாழ்த்து
» திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தார் பிரியங்கா
» டேம்.999 திரைப்படம்: ஒரு கண்ணோட்டம் !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum