தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஐந்து மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடித்தார் ரஜினிகாந்த்

Go down

ஐந்து மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடித்தார் ரஜினிகாந்த் Empty ஐந்து மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடித்தார் ரஜினிகாந்த்

Post  ishwarya Sat Mar 23, 2013 5:21 pm



சென்னை, அக்.4: பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்கும் "ரா ஒன்' ஹிந்திப் படத்தில் ஐந்து மாத இடைவெளிக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடித்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற "ராணா' படப்பிடிப்பில் ரஜினிக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு சிறுநீரகக் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்ட ரஜினி, அதன் பிறகு தமிழகம் திரும்பியவுடன் தொடர் ஓய்வில் இருந்து வந்தார்.

இதற்கிடையில் "எந்திரன்' பட பாணியில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்து வரும் "ரா ஒன்' என்ற படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் ரஜினி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் ரஜினிகாந்த், மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த "ரா ஒன்' படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்தார்.

இது குறித்து ஷாருக்கான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"ரா ஒன்' படத்தில் இடம்பெறும் ஒரு முக்கியமான காட்சியில் ரஜினிகாந்த் நடித்தால் அது படத்துக்குப் பலமாக அமையும் என்று எங்கள் படக் குழு விரும்பியது. எங்கள் விருப்பத்தை ரஜினியிடம் தெரிவித்தோம். அவரும் பெருந்தன்மையுடன் சம்மதித்தார்.

படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டிருந்தபோது ரஜினிக்கு எதிர்பாராத விதமாக உடல் நலக் குறைவு ஏற்பட்டது. அதனால், அவர் உடல் நலம் பெறும்வரை காத்திருந்தோம். ரஜினியின் தேதி கிடைத்தவுடன் சில முக்கியமான காட்சிகளைப் படமாக்கினோம்.

இதில் ரஜினி "எந்திரன்' படத்தில் வரும் "சிட்டி' கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படத்தில் "ஹை லைட்' ஆக அமையும்.

எங்கள் படத்தில் ரஜினி நடிக்க, அவரது மகள் செüந்தர்யாதான் உதவி செய்தார். அவரும் அவருடைய தொழில்நுட்பக் குழுவினரும் படத்தின் எடிட்டிங்கில் எங்களுக்கு உதவுவதற்காக இரண்டு நாள்கள் மும்பையில் தங்குகிறார்கள்.

ரஜினி நடித்த காட்சியுடன் "ரா ஒன்' படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. இந்தப் படத்தின் சில காட்சிகளில் "எந்திரன்' ரஜினி பாணியில் நான் நடித்திருக்கிறேன். ரஜினியுடன் நடித்த அனுபவம் மறக்க முடியாதது. அவருடைய அன்பில் எங்கள் படக்குழுவினர் அனைவரும் நெகிழ்ந்துவிட்டோம். "ரா ஒன்' படத்தின் மூலம் ரஜினிக்கு நாங்கள் மிகப் பெரிய மரியாதை செய்திருக்கிறோம்.

ரஜினி ரசிகர்களின் பிரார்த்தனையும் அவரது குடும்பத்தாரின் அன்பும் அவரை குணமடைய வைத்திருக்கிறது என்றார் ஷாருக்கான். "ரா ஒன்' படத்தை முதல்முறையாக தமிழிலும் தெலுங்கிலும் வெளியிடும் முயற்சியில் இருக்கிறார் ஷாருக். அதனால் படத்துக்குக் கூடுதல் முக்கியத்துவம் பெற, ரஜினி இதில் நடிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

ஆக்ஷன் காட்சியில் நடிப்பதற்கு ஏற்ற வகையில் ரஜினியின் உடல்நலம் தேறியுள்ளதால் "ராணா' டீம் உற்சாகத்தில் உள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum