நவம்பர் 20-ல் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க வாக்கு எண்ணிக்கை
Page 1 of 1
நவம்பர் 20-ல் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க வாக்கு எண்ணிக்கை
தென்னிந்திய திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் பதிவான வாக்குகளை, நவம்பர் 20ஆம் தேதி எண்ண வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென்னிந்திய திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஏற்பட்ட சில பிரச்னைகளைத் தொடர்ந்து, சங்கத்தின் பொதுக்குழுவைக் கடந்த அக்டோபர் 28ஆம் தேதி கூட்டப் போவதாக தயாரிப்பாளர் கேயார் அறிவித்திருந்தார். இதற்கு சங்கத்தின் தலைவர் எஸ்.ஏ. சந்திரசேகரன் சென்னை மாநகர சிவில் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றார்.
இந்தத் தடையை எதிர்த்து கேயார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், கேயார் தரப்பு கூட்டும் பொதுக்குழுக் கூட்டத்துக்கு அனுமதி வழங்கியது. மேலும், இந்தக் கூட்ட நடவடிக்கைகள் அனைத்தையும் உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி இ. பத்மநாபன் மேற்பார்வையிட்டு, சிவில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, கடந்த அக்டோபர் 28ஆம் தேதி பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தலைவர் எஸ்.ஏ. சந்திரசேகரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு, அதன் மீது வாக்கெடுப்பும் நடைபெற்றது. பொதுக் குழுக் கூட்ட நிகழ்வுகள் தொடர்பான அறிக்கை மற்றும் வாக்குப் பெட்டி ஆகியவை சென்னை மாநகர 11 ஆவது உதவி சிவில் நீதிமன்றத்தில் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டன.
இந்த நிலையில், இந்த வழக்கு சிவில் நீதிமன்ற நீதிபதி குமணன் முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, பொதுக்குழுவில் நடந்த வாக்கெடுப்பில் பதிவான வாக்குகளை நவம்பர் 20ஆம் தேதி தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழு அலுவலகத்தில் எண்ண வேண்டும்.
இந்த வாக்கு எண்ணிக்கை நீதிபதி இ. பத்மநாபன் மற்றும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நடத்தப்பட வேண்டும். இது குறித்த அறிக்கையை மறுநாள் 21ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி குமணன் உத்தரவிட்டார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நவம்பர் 20 திரைப்படத் தயாரிப்பாளர் சங்க வாக்கு எண்ணிக்கை: நீதிமன்றம்
» நவம்பர் 20 திரைப்படத் தயாரிப்பாளர் சங்க வாக்கு எண்ணிக்கை: நீதிமன்றம்
» தயாரிப்பாளர் சங்க பிரச்னை வாக்கு எண்ணிக்கை நடத்த கோர்ட் அனுமதி
» "சத்திரம் பேருந்து நிலையம்' திரைப்படத் தயாரிப்பாளர்கள் மீது வழக்கு
» தயாரிப்பாளர் சங்க ஓட்டு எண்ணிக்கை எப்போது?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum