தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விஸ்வரூபத்தின் இசையமைப்பு குறித்து கமல் மனம் திறக்கிறார்

Go down

விஸ்வரூபத்தின் இசையமைப்பு குறித்து கமல் மனம் திறக்கிறார் Empty விஸ்வரூபத்தின் இசையமைப்பு குறித்து கமல் மனம் திறக்கிறார்

Post  ishwarya Sat Mar 23, 2013 2:36 pm



இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ஒரே சமயத்தில் விஸ்வரூபம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. எப்போதுமே ரசிகர்களை ஏமாற்ற விரும்பாத கமல், தற்போது பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ள படம் விஸ்வரூபம்.

இப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள சவுண்ட் தொழில்நுட்பம் குறித்துப் பேசிய கமல், இப்படத்திற்கு அரா 3டி சவுண்ட் என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்படத்தை அதன் உண்மையானத் தன்மையோடு திரையிட வேண்டும் என்றால் திரையரங்குகளில் அரா 3டி தொழில்நுட்பம் பொருத்தப்பட வேண்டும். அவ்வாறு தமிழகம் மற்றும் கேரளாவில் மொத்தம் 30 திரையரங்குகளில் இந்த தொழில்நுட்பம் பொருத்தப்படுகிறது.

பொதுவாக நமது பக்கவாட்டில் இருந்துதான் சப்தம் கேட்கும். ஆனால் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியிருப்பதால், மேல் தளத்திலிருந்து உங்களுக்கு சப்தம் கேட்கும். இதுவரை இந்த வாய்ப்பை நான் அமெரிக்கத் திரையரங்குகளில் மட்டுமே அனுபவித்துள்ளேன். இனி தமிழகத்திலும் இந்த வாய்ப்பு கிட்டும் என்பது பெருமையாக உள்ளது. அதனைக் கேட்கும் போதுதான் நீங்கள் உணர்வீர்கள்.

படத்தின் வெளியீடு தள்ளிப்போடப்பட்டுள்ளது. ஏன் என்றால், ஒரே சமயத்தில் ஹிந்தியிலும் வெளியிட திட்டமிட்டுள்ளோம். அதற்காக 3000 பிரிண்ட் போடப்பட வேண்டும். அதற்காகவே வெளியீடு தள்ளிப்போயுள்ளது என்றார் உலக நாயகன் கமல்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum