தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஓம் சாந்தி ஓம் படம் பற்றி மனம் திறக்கிறார் நாயகன் ஸ்ரீகாந்த்

Go down

ஓம் சாந்தி ஓம் படம் பற்றி மனம் திறக்கிறார் நாயகன் ஸ்ரீகாந்த் Empty ஓம் சாந்தி ஓம் படம் பற்றி மனம் திறக்கிறார் நாயகன் ஸ்ரீகாந்த்

Post  ishwarya Fri Mar 22, 2013 5:06 pm



ஓம் சாந்தி ஓம் படத்தில் நடிக்க நடிகர் ஸ்ரீகாந்த் ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வந்தது. அது பற்றி அவரிடம் விசாரிக்கலாம் என்று அவரது வீட்டுக்குச் சென்றோம். ஆனால் அவர் படப்பிடிப்புக்கு போய் விட்டதாகக் கூறினார்கள்.

அதற்குள் படப்பிடிப்பா என்று தகவலை கேட்டுக் கொண்டு திருச்சிக்கு பறந்தோம்.

ஓம் சாந்தி ஓம் படத்தின் படப்பிடிப்பில் இருந்தார் ஸ்ரீகாந்த். என்ன சார் சொல்லாமல் கொள்ளாமல் பட பூஜை முடிந்து படப்பிடிப்பே துவக்கிவிட்டீர்களே என்று கேட்டால், பிப்ரவரி 1ம் தேதி சிறிய பூஜையுடன் படப்பிடிப்பை துவக்கி விட்டோம். இப்படத்தை இயக்குநர் பிரபாகரிடம் துணை இயக்குநராக பணியாற்றிய ராஜேஷ் இயக்குகிறார். தெலுங்கு நடிகை கதாநாயகியாக நடிக்கிறார் என்றார்.

முதலில் திருச்சி, பிறகு தஞ்சாவூரில் படப்பிடிப்பு நடக்கிறது. அது முடிந்துதான் படக்குழு சென்னை வருகிறது என்று கூறினார் ஸ்ரீகாந்த்.

இப்படத்தை தேர்வு செய்தது குறித்து கேட்டதற்கு, பாகன் படத்தில் நல்ல பெயர் கிடைத்தது. அதன்பிறகு நல்ல கதையை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன் அப்போதுதான் ராஜேஷ் இந்த கதையைக் கூறினார். குழந்தைகள் முதல் குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கும் வகையில் நல்ல காதல் கதையாக இது இருந்ததால் உடனே ஒப்புக் கொண்டேன். இப்படத்தை விரைவாக முடித்து கோடை விடுமுறைக்கு படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என்ற கூடுதல் தகவலையும் கூறினார் பாகன் நடிகர் ஸ்ரீகாந்த்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum