நடிகர் சங்க இடத்துக்கான குத்தகை ஒப்பந்தத்தை செயல்படுத்த நீதிமன்றம் இடைக்காலத் தடை
Page 1 of 1
நடிகர் சங்க இடத்துக்கான குத்தகை ஒப்பந்தத்தை செயல்படுத்த நீதிமன்றம் இடைக்காலத் தடை
சென்னையில் உள்ள நடிகர் சங்க இடத்தை தனியார் நிறுவனத்துக்கு குத்தகைக்கு அளித்தது தொடர்பான ஒப்பந்தத்தை செயல்படுத்த உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களான எஸ். முருகன், பி.ஏ. காஜா மொகைதீன் ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு நீதிபதி வினோத் குமார் சர்மா முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் சங்க அறக்கட்டளை இடத்தில் கட்டுமானப் பணி உள்பட எவ்விதப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்று நடிகர்கள் ராதாரவி, சரத்குமார் மற்றும் எஸ்.பி.ஐ. சினிமாஸ் என்ற தனியார் நிறுவனத்துக்கு நீதிபதி இடைக்காலத் தடை விதித்தார்.
மனு விவரம்: நடிகர் சங்க அறக்கட்டளை கடந்த 1987ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த அறக்கட்டளைக்குச் சொந்தமான 18 கிரவுண்ட் நிலம் சென்னை தியாகராய நகர் அபிபுல்லா சாலையில் உள்ளது.
இந்நிலையில், அறக்கட்டளையின் அறங்காவலரான ராதாரவி, அந்த இடத்தை நிர்வகிப்பதற்கான பொது அதிகாரத்தை, தலைமை அறங்காவலர் சரத்குமாருக்கு அளித்துள்ளார். இதற்கான ஒப்பந்தம் கடந்த 2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர், அந்த இடத்தில் வணிக வளாகம் கட்டுவதற்காக ராயப்பேட்டையில் உள்ள ஒரு சினிமா நிறுவனத்துக்கு ராதாரவி, சரத்குமார் ஆகியோர் குத்தகைக்கு அளித்துள்ளனர். இது தொடர்பான குத்தகை ஒப்பந்தம் 25.11.2010 அன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராதாரவியும், சரத்குமாரும் நெருங்கிய உறவினர்கள். அவர்கள் இருவரும் சேர்ந்து சட்ட விரோதமான முறையில் நடிகர் சங்க அறக்கட்டளை நிலத்தை தனியார் நிறுவனத்துக்கு குத்தகைக்கு அளித்துள்ளனர்.
ஆகவே, நடிகர் சங்க அறக்கட்டளை இடத்தில் எவ்வித கட்டுமானப் பணிகளோ அல்லது வேறு எந்தப் பணிகளோ மேற்கொள்வதற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று தங்கள் மனுவில் முருகன் மற்றும் காஜா மொகைதீன் ஆகியோர் கோரியுள்ளனர்.
இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி சர்மா, இந்த மனு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய எதிர்மனுதாரர்கள் அவகாசம் கோருவதால், வழக்கின் விசாரணையை டிசம்பர் 18ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. நீதிமன்றம் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை இடைக்காலத் தடை நீடிக்கும் என்று உத்தரவிட்டார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நவம்பர் 20 திரைப்படத் தயாரிப்பாளர் சங்க வாக்கு எண்ணிக்கை: நீதிமன்றம்
» நவம்பர் 20 திரைப்படத் தயாரிப்பாளர் சங்க வாக்கு எண்ணிக்கை: நீதிமன்றம்
» நடிகர் சங்க பொதுக்குழுக் கூட்டம்-ஒரு முன்னணி நடிகர், நடிகையும் வரவில்லை!
» நடிகர் ரஜினிகாந்த்தின் மகள் எடுத்த படத்துக்கு நீதிமன்றம் தடை
» நடிகர் விஜயகுமார் மீதான நில மோசடி வழக்கு தொடரும்: நீதிமன்றம் உத்தரவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum