தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடிகர் விஜயகுமார் மீதான நில மோசடி வழக்கு தொடரும்: நீதிமன்றம் உத்தரவு

Go down

நடிகர் விஜயகுமார் மீதான நில மோசடி  வழக்கு தொடரும்: நீதிமன்றம் உத்தரவு Empty நடிகர் விஜயகுமார் மீதான நில மோசடி வழக்கு தொடரும்: நீதிமன்றம் உத்தரவு

Post  ishwarya Fri Mar 22, 2013 2:22 pm

நடிகர் விஜயகுமார் மீதான நில மோசடி வழக்கை தள்ளுபடி செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் ரத்து செய்துள்ளது.
நடிகர் விஜயகுமாருக்கும், அனுபவ் நிறுவன இயக்குனர் நடேசனுக்கும் இடையே 1994-ஆம் ஆண்டு நில விற்பனை தொடர்பாக ஒப்பந்தம் ஏற்பட்டது.
அதன்படி சென்னையை அடுத்த களிப்பட்டூரில் 12.32 ஏக்கர் நிலத்தை அனுபவ் நிறுவனத்துக்குக் கொடுத்து, ரூ.1.53 கோடி விஜயகுமார் வாங்கியுள்ளார்.
அந்த நிலத்தில் 6.81 ஏக்கர் நிலத்தில் விஜயகுமாருக்கு உரிமை இல்லை என்றும், அதனால் ரூ.90.95 லட்சத்தை தர வேண்டும் என்றும் உயர் நீதிமன்றத்தில் (கம்பெனி வழக்குகள்) வழக்குத் தொடரப்பட்டது.
இது தொடர்பாக மூத்த வழக்குரைஞர் எம்.ரவீந்திரன் ஆராயும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதில் வழக்கை ரத்து செய்து பிறப்பிக்கப்பட்ட தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து எம்.ரவீந்திரன் மனு தாக்கல் செய்தார்.
உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.பானுமதி, கே.கே.சசிதரன் மனுவை விசாரித்தனர். சில உண்மைகளை மறைத்து தனி நீதிபதியின் உத்தரவு பெறப்பட்டுள்ளது. எனவே விஜயகுமார் மீதான குற்ற வழக்கை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்கிறோம் என்று உத்தரவிட்டனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கார் மோசடி வழக்கு: நடிகை புவனேசுவரிக்கு சம்மன்; விசாரணைக்கு ஆஜராக உத்தரவு
» வடிவேலுவிடம் பண மோசடி – நடிகர் சிங்கமுத்து மீது கொலை மிரட்டல் வழக்கு
»  மோசடி வழக்கு: நடிகர் “பவர் ஸ்டார்” சீனிவாசன் கோர்ட்டில் ஆஜர்
»  மோசடி வழக்கில் ஆஜராகவில்லை: நடிகர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசனை கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் மதுரை கோர்ட்டு உத்தரவு
» பணம் கொடுத்த தொழில் அதிபருடன் சமரசம்: நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீதான வழக்கு வாபஸ் ஆகிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum