தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடிகை தேவயானியை வைத்து 25 படங்கள் இயக்குவேன்: இயக்குநர் ராஜகுமாரன்

Go down

நடிகை தேவயானியை வைத்து 25 படங்கள் இயக்குவேன்: இயக்குநர் ராஜகுமாரன் Empty நடிகை தேவயானியை வைத்து 25 படங்கள் இயக்குவேன்: இயக்குநர் ராஜகுமாரன்

Post  ishwarya Sat Mar 23, 2013 2:07 pm

நடிகை தேவயானியை வைத்து 25 படங்களுக்கு மேல் இயக்குவேன் என்று கணவரும், இயக்குநருமான ராஜகுமாரன் தெரிவித்தார்.
இயக்குநர் ராஜகுமாரன் இயக்கி நடித்த திருமதி தமிழ் படம் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியது:
நடிகை தேவயானியை வைத்து 5 படங்கள் இயக்கியுள்ளேன். தேவயானியின் 75-வது படமான திருமதி தமிழ் படத்தை நான் இயக்கி அவருக்கு ஜோடியாக நடித்துள்ளேன். இப்படத்தி்ன் பாடல் வெளியீட்டு விழா கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இப்படத்தில் பல முன்னனி நடிகர்கள் நடித்துள்ளனர். சென்னை நகரை மையமாக வைத்து படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படம் சட்டப்பிரச்னை குறித்து கருத்தை வெளிப்படுத்தும். அரசியல்வாதிகளுக்காக சட்டங்கள் எவ்வாறு திருத்தம் செய்யப்படுகிறது என்பதை மையமாக கொண்டு படம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆண் ஒரு பெண்னை அங்கீகரிக்கும் போது தான் பெண் திருமதி ஆவாள். இதனை கருத்தில் கொண்டு படத்திற்கு திருமதி தமிழ் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
பழைய பாடல்களை ரீமேக் செய்வதில் உடன்பாடு இல்லை. பழைய பாடல்கள் நமக்கு முன்னோடியாக திகழ்கிறது. இப்படம் பொங்கலுக்கு பிறகு ரீலிஸ் ஆக உள்ளதாக தெரிவித்தார்.
நடிகை தேவயானி, இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார், நடிகர் ரமேஷ் கண்ணா, பாடலாசிரியர் கவிஞர் விவேகா ஆகியோர் உடனிருந்தனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சிவபெருமான் மகிமைகளை வைத்து பக்தி படம் இயக்குவேன் பிரபுதேவா
» இயக்குநர் எழிலுக்கு 3 புதிய படங்கள்
» சிவாஜி, ரஜினி, கமலை வைத்து ஏராளமான படங்கள் தயாரித்த கே ஆர் ஜி மரணம்!
» 6 பெண்களை ரகசிய அறையில் வைத்து தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த ஆசாமி!(படங்கள்)
» பளார் விட்ட இயக்குநர்… கதறிய நடிகை… கொதிக்கும் மகளிர்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum