சிவாஜி, ரஜினி, கமலை வைத்து ஏராளமான படங்கள் தயாரித்த கே ஆர் ஜி மரணம்!
Page 1 of 1

சென்னை: பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கேஆர்ஜி எனும் கே ராஜகோபால் இன்று காலை சென்னையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 73.
மாரடைப்பு காரணமாக அவர் உயிர் பிரிந்தது.
சிவாஜி, ரஜினி, கமல், மம்முட்டி, மோகன்லால் என ஜாம்பவான்களை வைத்து 65க்கும் அதிகமான படங்களைத் தயாரித்தவர் கேஆர்ஜி.
ஸ்ரீதர் இயக்கத்தில் வந்த நெஞ்சில் ஓர் ஆலயம், சிவாஜி நடித்த நேர்மை, தாய்க்கு ஒரு தாலாட்டு, திருப்பம், ரஜினி நடித்த ஜானி, கமல் நடித்த சிவப்பு ரோஜாக்கள், கடல் மீன்கள், சரத்குமார் நடித்த செம்மலர், பிரபு நடித்த பட்ஜெட் பத்மநாபன், மிடில்கிளாஸ் மாதவன், விஜய் நடித்த மின்சாரக் கண்ணா, மம்முட்டி, மோகன்லால் நடித்த மலையாளப் படங்கள் என 65க்கும் மேற்பட்ட படங்களை தனது ‘கேஆர்ஜி இன்டர்நேஷனல் பிலிம் கார்ப்பரேஷன்’ சார்பில் தயாரித்தவர் கேஆர்ஜி.
தயாரிப்பாளர் சங்கத்தில் 4 ஆண்டுகள் தலைவராகவும், பிலிம்சேம்பரில் 5 ஆண்டுகள் தலைவராகவும் இருந்தார். தயாரிப்பாளர் சங்க அறக்கட்டளை உருவாக முக்கிய காரணமாக இருந்தார் கேஆர்ஜி.
கலைமாமணி விருது பெற்றுள்ளார்.
தயாரிப்பாளர் சங்கத்தின் அடுத்த தலைவர் பதவிக்கான வேட்பாளராக இவரை நிறுத்த ஒரு அணி முடிவு செய்திருந்தது. இந்த நிலையில் அவர் மரணமடைந்துவிட்டார்.
இவருக்கு ஒரு மகன் கங்காதரன். அவர் காலமாகிவிட்டார். மகள் பெயர் ராதா. கவுதம், மாளவிகா என மகன் வழி பேரன் பேத்திகள் உள்ளனர்.
திநகர் பாகீரதி அம்மாள் தெருவில் உள்ள வீட்டில் கேஆர்ஜி உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணிக்கு இறுதி ஊர்வலம் நடக்கிறது.
திரையுலகம் அஞ்சலி..
கேஆர்ஜி மறைந்துவிட்ட செய்தி கேட்டு தமிழ் திரையுலகம் அதிர்ச்சியும் இரங்கலும் தெரிவித்துள்ளது. தயாரிப்பாளர்கள் ஏவி எம் சரவணன், எஸ்ஏ சந்திரசேகரன், கலைப்புலி தாணு உள்பட பல தயாரிப்பாளர்கள் கேஆர்ஜி வீட்டில் வந்து அஞ்சலி செலுத்தினர். ஏராளமான நடிகர் நடிகைகள், தயாரிப்பாளர்கள், மலையாள திரையுலக பிரமுகர்கள் கேஆர்ஜி வீட்டில் குவிந்து வருகின்றனர்.
தொடர்புக்கு- 9383388860 (பாலன் பிஆர்ஓ)

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் படங்களின் ஒளிப்பதிவாளர் – இயக்குநர் கர்ணன் மரணம்
» எம்ஜிஆர், சிவாஜி படங்களில் நடித்த நடிகை ராஜசுலோசனா மரணம்
» ‘ஆன்ட்டிகளை மடக்க..’: ரஜினி – கமலை சிறுமைப்படுத்திய எஸ்.பி.பி மகன்!
» ரஜினி – கமலை இயக்க ஆசை! – கவுதம் மேனன்
» ரஜினி கமலை போல் நிச்சயம் வருவேன்: உதய்கிரண்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum