தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பாகிஸ்தானின் பிரபல நாளிதழின் இணையதளத்தில் விஸ்வரூபம் பற்றிய செய்தி

Go down

பாகிஸ்தானின் பிரபல நாளிதழின் இணையதளத்தில் விஸ்வரூபம் பற்றிய செய்தி Empty பாகிஸ்தானின் பிரபல நாளிதழின் இணையதளத்தில் விஸ்வரூபம் பற்றிய செய்தி

Post  ishwarya Sat Mar 23, 2013 2:05 pm

கமல்ஹாசன் தயாரித்து, இயக்கி, நடித்துள்ள படம் "விஸ்வரூபம்'. இந்தப் படம் ஆரோ 3டி ஒலி தொழில்நுட்பத்தில் வெளியாகிறது. இந்தத் தொழில்நுட்பத்தில் ஆசியாவில் வெளியாகும் முதல் படம் என்பதால் தமிழ்திரையுலகம் மட்டுமின்றி இந்திய திரையுலகத்தின் எதிர்பார்ப்பும் தற்போது விஸ்வரூபம் திரைப்படத்தை பற்றியதுதான். இந்நிலையில் அதற்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது பாகிஸ்தானின் பிரபல டெய்லிடைம்ஸ் நாளிதழ். அதன் இணையதளத்தில் விஸ்வரூபம் பற்றிய செய்தியை வெளியிட்டுள்ளது. அதில் கமல் ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்தின் டிரைலர் அனைவரையும் கவர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு கமல் ஹாசனின் ஆன்லைன் பேட்டி ஒன்றும் அந்த இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆண்ட்ரியா, பூஜா குமார், ராகுல் போஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு சங்கர் எசான் லாய் என்பவர் இசையமைத்துள்ளார். சனுஜான் வர்கீஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். அனைவரின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜனவரி 11ம் தேதி விஸ்வரூபம் திரைப்படம் திரைக்கு வருகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» மின்சாரசபையின் மின்தடை பற்றிய செய்தி
» விஸ்வரூபம் படத்தில் பிரபல நடிகர்களை நடிக்க வைக்காதது ஏன்? : கமல்ஹாசன் பதில்
»  "விஸ்வரூபம்' தடை பற்றிய கருத்து: விஜயகாந்த் மீது அவதூறு வழக்கு
» ‘விஸ்வரூபம்’ படம் பற்றிய கருத்து : நடிகர் சங்கத்துக்கு விஷால் பதில்
» சிம்புவை பற்றி ஒரு செய்தி….அதுவும் வழக்கம் போலவே கெட்ட செய்தி.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum