தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இளையராஜாவுக்கு சங்கீத நாடக அகாதெமி விருது

Go down

இளையராஜாவுக்கு சங்கீத நாடக அகாதெமி விருது Empty இளையராஜாவுக்கு சங்கீத நாடக அகாதெமி விருது

Post  ishwarya Sat Mar 23, 2013 1:44 pm



"இசைஞானி' இளையராஜாவுக்கு 2012ஆம் ஆண்டுக்கான சங்கீத நாடக அகாதெமி விருது வழங்கப்பட இருக்கிறது.

இசைத் துறையில் அவரது படைப்புத் திறன், புதுமையான முயற்சியில் வெற்றி பெற்றது ஆகிய சாதனைகளுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.

விருது பெறுவோருக்கு ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசு, தாமிரத்தினால் ஆன பாராட்டுப் பத்திரம் அளிக்கப்பட்டு, அங்கவஸ்திரம் அணிவிக்கப்பட்டு கெüரவம் வழங்கப்படும்.

இளையராஜா தவிர இசைத் துறையைச் சேர்ந்த மேலும் 8 பேர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ராஜசேகர் மன்சூர், அஜய் போகன்கர் (இந்துஸ்தானி இசைப் பாடல்), சபீர்கான் (தபேலா), பஹாஉத்தீன் தாகர் (ருத்ர வீணை), ஓ.எஸ். தியாகராஜன் (கர்நாடக இசை), மைசூர் எம். நாகராஜ் (வயலின்), கே.வி. பிரசாத் (மிருதங்கம்), பாய் பல்பீர் சிங் ராகி (குர்பானி இசை) ஆகியோரும் சங்கீத நாடக அதாதெமி விருது பெறுகின்றனர்.

கடம் வித்வான் டி.எச்.விநாயக்ராம், முதுபெரும் நாடக ஆசிரியர் ரத்தன் தியாம், வயலின் இசைக் கலைஞர் (ஹிந்துஸ்தானி இசை), என்.ராஜம் ஆகியோர் உயரிய சங்கீத நாடக அகாதெமி ஃபெலோஷிப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கு ரூ. 3 லட்சம் ரொக்கம் வழங்கப்படும். வெகு சிலருக்கே இந்த கெüரவம் வழங்கப்படுகிறது.

இசை தவிர நடனக் கலையில் 9 பேர் நாடக அகாதெமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதன் விவரம்: பிரியதர்சினி கோவிந்த் (பரத நாட்டியம்), விஜய் சங்கர் (கதக்), வாழேங்கடா விஜயன் (கதக்களி), வேதாந்தம் ராமலிங்க சாஸ்திரி (குச்சுப்புடி), சர்மிளா பிஸ்வாஸ் (ஒடிசி), ஜெய் நாராயண் சமால், பைங்குளம் தாமோதர சாக்யார், ஜுவாலா பிரசாத், அதிதி மங்கள் தாஸ்.

இசை, நடனம், நாடகம், பொம்மலாட்டம் என நான்கு துறைகளிலும் சேர்ந்து மொத்தம் 36 பேர், 2012ஆம் ஆண்டுக்கான சங்கீத நாடக அகாதெமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum