ஸ்ரீஆண்டாள் குறித்து இசை ஆல்பம்:நடிகர் சிவக்குமார் வெளியிடுகிறார்
Page 1 of 1

இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா இசையமைத்து, இசைஞானி இளையராஜா குடும்பதினர் ஸ்ரீஆண்டாள் குறித்து பாடிய ஆடியோ சி.டி. ஆல்பத்தை ஜனவரி 19-ம் தேதி, கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் திரைப்பட நடிகர் சிவக்குமார் வெளியிடுகிறார். அன்றைய தினம் ஸ்ரீஆண்டாள் கோயில் முன்பு பிரமாண்ட இசைக் கச்சேரியும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பதிவாளர் டாக்டர் வெ.வாசுதேவன் செய்து வருகிறார்.
கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்திற்கு வந்த இசையமைப்பாளர் கார்த்திக்ராஜாவை, வேந்தர் க.ஸ்ரீதரன், பதிவாளர் டாக்டர் வெ.வாசுதேவன் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் கார்த்திக்ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த ஆண்டாள் வரதராஜன் என்பவரின் மகன் சுந்தர் எனது நண்பர். அவரது விருப்பத்தின்படி இந்த ஆல்பம் உருவானது. இது எனது முதல் ஆல்பம். இதில் எனது தந்தை, எனது சகோதரர் யுவன்சங்கர்ராஜா உள்ளிட்டோர் பாடியுள்ளனர். எனது தந்தை பாடல் பதிவின் போது, எந்தப் பாடலாக இருந்தாலும் 10 நிமிடத்தில் பாடி முடித்து விடுவார். ஆனால் இந்த ஆல்பத்தில் உள்ள ஒரு பாடலை பாடி முடிக்க 3 மணி நேரம் ஆனது. இந்த ஆல்பம் விற்பனை மூலம் வரும் லாபம் முழுவதும் ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோயில் திருப்பணிக்கு வழங்கப்படும் என்றார் அவர்.
மேலும் ஜனவரி 19-ம் தேதி மாலை 4 மணிக்கு கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் இந்த ஆல்பம் வெளியீட்டு விழா நடைபெறுகிறது. திரைப்பட நடிகர் சிவக்குமார் இதில் கலந்து கொள்கிறார். மாலை 6 மணிக்கு ஸ்ரீஆண்டாள் சன்னதி முன்பு மாபெரும் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது என்றார் அவர்.
துணைவேந்தர் பி.கன்னியப்பன் கூறுகையில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் மியூசிக் அகாடமி அமைக்க ஏற்பாடு செய்யப்படும். இசை குறித்த பல்வேறு பாடப் பிரிவுகள் தொடங்குவதற்கும் ஆலோசிக்கப்படுகிறது என்றார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தமிழ்ப் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசினாரா சிவக்குமார்?
» பரதேசியை வெளியிடுகிறார் அனுராக் காஷ்யப்
» 'ஒன்பதுல குரு' ஆடியோவை வெளியிடுகிறார் விஜய்
» முகமூடிதிரைப்படத்தின் ஆடியோவை வெளியிடுகிறார் விஜய்
» பில்லா 2 இசையை ரஜினி வெளியிடுகிறார்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum