தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விஸ்வரூபம் படத்தை பிப்ரவரி 2-ல் டி.டி.எச்.சில் வெளியிட முடிவு

Go down

விஸ்வரூபம் படத்தை பிப்ரவரி 2-ல்  டி.டி.எச்.சில் வெளியிட முடிவு Empty விஸ்வரூபம் படத்தை பிப்ரவரி 2-ல் டி.டி.எச்.சில் வெளியிட முடிவு

Post  ishwarya Sat Mar 23, 2013 12:54 pm



"விஸ்வரூபம்' திரைப்படம் வரும் பிப்ரவரி 2-ம் தேதி டி.டி.எச்.சில் ஒளிபரப்பப்படும் என கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

இது குறித்து கமல் தரப்பில் கூறப்படுவதாவது: டி.டி.எச். என்ற புதிய தொழில்நுட்பத்தை அச்சத்துடன் வரவேற்கத் துணிந்திருக்கும் விநியோகிஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களுக்கு அச்சத்தைப் போக்கும் வகையில் டி.டி.எச்-சில் வெளியிடும் தேதியை ஒத்தி வைத்துள்ளேன்.

அதன்படி ஜனவரி 10-ம் தேதி வெளியிடுவதாக இருந்த டி.டி.எச். காட்சி பிப்ரவரி 2-ம் தேதி ஒளிபரப்பப்படும். இந்தியில் பிப்ரவரி 1-ம் தேதி ஒளிபரப்பப்படும்.

கட்டணம் குறைப்பு: தமிழ், தெலுங்கு காட்சிகளின் கட்டணம் குறைக்கப்படுகிறது. ஏற்கெனவே பணம் கட்டியவர்கள் அதை முழுவதுமாக திரும்பப் பெற முடியும். குறைக்கப்பட்ட கட்டணம் போக மீதமுள்ள பாக்கியை திரும்பப் பெறவும் முடியும். இதற்கான அறிவிப்புகளை டி.டி.எச். நிறுவனங்களே அறிவிக்க கடமைப்பட்டுள்ளன.

ரசிகர்களின் வசதியைக் கருதி மூன்று காட்சி நேரங்கள் அறிவிக்கப்படும். அதில் ஏதேனும் ஒரு காட்சி நேரத்தை அவர்கள் தேர்வு செய்து பார்க்கலாம். இதுபோன்ற புதிய மாற்றங்களுடன் டி.டி.எச். நிறுவனங்களின் பெயர்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று கமல் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum