ரூ.300 கட்டணம்: டி.டி.எச்.சில் 15-ந்தேதி விஸ்வரூபம் ஒளிபரப்பு?
Page 1 of 1

கமல் நடித்து இயக்கிய விஸ்வரூபம் படத்துக்கு அரசு விதித்த தடை நீங்கியுள்ளது. இதனால் தியேட்டர்களில் திரையிட ஏற்பாடு நடக்கிறது.
ஏற்கனவே இப்படத்தை கடந்த மாதம் 10-ந்தேதி டி.டி.எச்.சில் ஒளிபரப்ப கமல் திட்டமிட்டார். ஒரு இணைப்புக்கு ரூ.1000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. 11-ந்தேதி தியேட்டர்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் தியேட்டர் அதிபர்கள் டி.டி.எச்சில் விஸ்வரூபம் படத்தை ஒளிபரப்ப எதிர்ப்பு தெரிவித்தனர். தியேட்டர்களில் திரையிடமாட்டோம் என்றும் எச்சரித்தனர்.
இதையடுத்து டி.டி.எச்.களில் படம் வெளியாகவில்லை. திரையரங்கு உரிமையாளர்களுடன் இப்பிரச்சினை குறித்து கமல் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில் 25-ந்தேதி தியேட்டர்களில் திரையிடுவது என்றும் 2-ந்தேதி டி.டி.எச்.களில் ஒளிபரப்புவது என்றும் உடன்பாடு ஏற்பட்டது.
அதன் பிறகு முஸ்லிம் அமைப்பினர் எதிர்ப்பால் படத்துக்கு அரசு தடை விதித்தது. இதனால் திட்டமிட்டபடி 2-ந்தேதி டி.டி.எச்.களில் படத்தை ஒளிபரப்ப முடியவில்லை.
தற்போது தடை நீக்கப்பட்டு உள்ளதால் வருகிற 8-ந்தேதி தியேட்டர்களில் விஸ்வரூபம் வெளியாகிறது. 500-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் திரையிடப்படுகிறது.
தியேட்டர்களில் வெளியாகி ஒரு வாரத்துக்கு பிறகு டி.டி.எச்.களில் வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் ஏற்கனவே சம்மதம் தெரிவித்து உள்ளனர். எனவே 15-ந்தேதி டி.டி.எச்.களில் படம் வரும் என தெரிகிறது.
இதற்காக டி.டி.எச். நிறுவனத்தினரிடம் கமலஹாசன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஒரு இணைப்புக்கு ரூ.300 முதல் ரூ.500 வரை கட்டணம் வசூலிக்கப்படலாம் என தெரிகிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பிப்ரவரி 2 ம் தேதி டி.டி.எச்.சில் ஒளிபரப்பாகிறது விஸ்வரூபம்
» விஸ்வரூபம் படத்தை பிப்ரவரி 2-ல் டி.டி.எச்.சில் வெளியிட முடிவு
» ஏர்டெல்லை தொடர்ந்து ரிலையன்ஸ் மற்றும் வீடியோகான் டி.டி.எச்.,சில் விஸ்வரூபம்!
» 7 காட்சிகள் நீக்கம்: விஸ்வரூபம் படம் 8-ந்தேதி ரிலீஸ்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum