தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தள்ளிப்போன டேவிட் வெளியீடு

Go down

தள்ளிப்போன டேவிட் வெளியீடு Empty தள்ளிப்போன டேவிட் வெளியீடு

Post  ishwarya Sat Mar 23, 2013 12:36 pm



டேவிட் திரைப்படம் வெளியீடு மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இத்திரைப்படம் பிப்ரவரி 1ம் தேதி வெளியாவதாக இருந்தது. அதே தேதியில் மணிரத்தனம் இயக்கும் கடல் திரைப்படம் வெளியாகலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம் என்பதை உணர்ந்த டேவிட் தயாரிப்பு வட்டாரம் திரைப்பட வெளியீட்டை தள்ளி வைத்துள்ளது. இந்நிலையில் படத்தை பிப்ரவரி 8ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பிஜாய் நம்பியார் இயக்கும் இப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகி வருகிறது. விக்ரம், ஜீவா ஆகிய இருவரும் நாயகர்களாக நடிக்கின்றனர். இவர்களுடன் தபு, லாரா தத்தா, இஷா ஷர்வானி, ஷீத்தல் மேனன், நிஷான், நாசர் மற்றும் பலர் நடித்துள்ளனர். கொலவெறி அனிருத் இசையமைத்துள்ளார்.

டேவிட் படத்தின் தமிழ் தெலுங்கு பதிப்புகளில் மட்டுமே ஜீவா நடிக்கிறார், ஹிந்தியில் நெய்ல் நிதின் முகேஷ் ஜீவாவுக்கு பதிலாக நடிக்கிறார். தமிழ் மற்றும் ஹிந்தியில் நேரடியாக படத்தை எடுத்து விட்டு, தெலுங்கில் டப் செய்து வெளியிடுகிறார்கள். படத்தில் விக்ரம் மீனவராகவும், ஜீவா இசைக்கலைஞராகவும் நடித்துள்ளனர். பிஜாய் நம்பியார் மணிரத்தனத்தின் முன்னாள் உதவி இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum