கர்நாடகம், ஆந்திரத்தில் திரையிடப்பட்டது விஸ்வரூபம்
Page 1 of 1
கர்நாடகம், ஆந்திரத்தில் திரையிடப்பட்டது விஸ்வரூபம்
முஸ்லிம் அமைப்புகளின் எதிர்ப்புக்கிடையே கர்நாடகத்தின் சில இடங்களில் விஸ்வரூபம் திரைப்படம் சனிக்கிழமை திரையிடப்பட்டது.
நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விஸ்வரூபம் திரைப்படம் பாதுகாப்பு காரணங்களுக்காக போலீஸார் கேட்டுக்கொண்டதன் பேரில், கர்நாடகத்தில் ஞாயிற்றுக்கிழமை திரையிட முடிவு செய்யப்பட்டிருந்தது.
ரசிகர்களின் ஆர்வம் காரணமாக பெங்களூர், மைசூர், தாவணகெரே, ஷிமோகா உள்ளிட்ட இடங்களில் விஸ்வரூபம் சனிக்கிழமையே திரையிடப்பட்டது. சில இடங்களில் திரையிடுவதற்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் காட்சிகள் நிறுத்தப்பட்டதாகப் போலீஸார் தெரிவித்தனர். மைசூரில் விஸ்வரூபம் திரையிட்ட பாலாஜி திரையரங்கை சனிக்கிழமை அடித்து நொறுக்கிய முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், படத்தை திரையிடுவதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். திரைப்படத்தைக் காண வந்த ரசிகர்களையும் போராட்டக்காரர்கள் அச்சுறுத்தியதாகப் போலீஸார் கூறினர்.
ஞாயிற்றுக்கிழமை திரையிட திட்டமிட்டுள்ள விஸ்வரூபம் படத்தை பெங்களூரில் ஊர்வசி திரையரங்கில் சனிக்கிழமை திரையிட்டதற்கு போலீஸார் ஆட்சேபம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து திரைப்படம் நிறுத்தப்பட்டது. ஷிமோகா, பத்ராவதியில் திரையிட்டபோதும், அதை சிலர் ஆட்சேபித்ததைத் தொடர்ந்து திரைப்படம் நிறுத்தப்பட்டது.
இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதால் திரையரங்கைச் சுற்றி தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆங்காங்கே எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டபோதும் சில திரையரங்குகளில் விஸ்வரூபம் திரையிடப்பட்டது.
இதுகுறித்து பட விநியோகிப்பாளர் கங்கராஜு கூறியது: சனிக்கிழமை சில இடங்களில் விஸ்வரூபம் திரையிடப்பட்டது. அது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. திட்டமிட்டப்படி ஞாயிற்றுக்கிழமை கர்நாடகம் முழுவதும் விஸ்வரூபம் திரையிடப்படும். கர்நாடகத்தில் 30 திரையரங்குகளில் படம் வெளியாகும். பெங்களூரில் 12 திரையரங்குகள் உள்பட கர்நாடகத்தின் 20 திரையரங்குகளில் தமிழில் திரையிடப்படும் என்றார் அவர்.
ஹைதராபாதில் திரையிடப்பட்டது விஸ்வரூபம்: ஆந்திர மாநிலத் தலைநகர் ஹைதராபாதில் உள்ள பிரசாத் ஐமேக்ஸ் உள்ளிட்ட பல திரையரங்குகளில் "விஸ்வரூபம்' சனிக்கிழமை திரையிடப்பட்டது.
ஆந்திரப் பிரதேச திரைப்பட வர்த்தகப் பேரவை தலைவர் தம்மா ரெட்டி கூறுகையில், ""விஸ்வரூபம் திரைப்படம் ஹைதராபாதில் சில திரையரங்குகளில் வெள்ளிக்கிழமையே திரையிடப்பட்டது. பிரச்னை ஏற்படக்கூடிய பகுதிகளில் மட்டுமே அத்திரைப்படத்தை திரையிடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது'' என்றார்.
முன்னதாக போலீஸாரின் உத்தரவைத் தொடர்ந்து ஹைதராபாதில் அத்திரைப்படத்தை வெள்ளிக்கிழமை திரையிடுவதை திரையரங்க உரிமையாளர்கள் நிறுத்திவைத்திருந்தனர்.
இது தொடர்பாக பேசிய ஆந்திர உள்துறை அமைச்சர் சபிதா இந்திரா ரெட்டி, ""ஹைதராபாத் மற்றும் சைபராபாதைச் சேர்ந்த காவல் துறை ஆணையர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க விஸ்வரூபம் திரைப்படம் திரையரங்குகளில் திரையிடுவது நிறுத்திவைக்கப்பட்டது. பிரச்னை ஏதும் ஏற்படாது என்பதை உறுதிசெய்தபின், அப்படத்தை வெளியிட அனுமதி அளிக்கப்படும்'' என்றார்.
எனினும், ஆந்திர மாநிலத்தின் பிற பகுதிகளில் அத்திரைப்படம் வெள்ளிக்கிழமை அன்றே திரையிடப்பட்டது.
கேரளம்: கேரளத்தில் வெள்ளிக்கிழமை முதல் விஸ்வரூபம் மாநிலம் முழுவதும் திரையிடப்பட்டது. சனிக்கிழமையும் பெரும்பாலான தியேட்டர்களில் எந்தவிதமான பிரச்னையுமின்றி திரையிடப்பட்டது. எனினும், எர்ணாகுளம், இடுக்கி, பாலக்காடு ஆகிய பகுதிகளில் சில முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்தியதால், அப்பகுதிகளில் மட்டும் திரையரங்க உரிமையாளர்கள் படத்தை திரையிடுவதை நிறுத்திவைத்துள்ளனர்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கர்நாடகாவில் பலத்த பாதுகாப்புடன் விஸ்வரூபம் ரிலீஸ்: 40 தியேட்டர்களில் திரையிடப்பட்டது
» விஸ்வரூபம்
» விஸ்வரூபம்
» உயர் நீதிமன்றத்தில் திரையிடப்பட்டது "துப்பாக்கி'
» பிரெஞ்சில் விஸ்வரூபம்
» விஸ்வரூபம்
» விஸ்வரூபம்
» உயர் நீதிமன்றத்தில் திரையிடப்பட்டது "துப்பாக்கி'
» பிரெஞ்சில் விஸ்வரூபம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum