தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆதிபகவன் படத்தை இந்து அமைப்பினருக்கு திரையிட்டுக் காட்ட வேண்டும்: இந்து மக்கள் கட்சியினர்

Go down

ஆதிபகவன் படத்தை இந்து அமைப்பினருக்கு திரையிட்டுக் காட்ட வேண்டும்: இந்து மக்கள் கட்சியினர் Empty ஆதிபகவன் படத்தை இந்து அமைப்பினருக்கு திரையிட்டுக் காட்ட வேண்டும்: இந்து மக்கள் கட்சியினர்

Post  ishwarya Sat Mar 23, 2013 11:40 am



ஆதிபகவன் திரைப்படத்தை இந்து அமைப்பினருக்கு திரையிட்டுக் காட்டிய பின்னரே திரையிட வேண்டும் என இந்து மக்கள் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திரைப்பட இயக்குநர் சங்கச் செயலாளர் அமீரின் இயக்கத்தில் உருவான படம் ஆதிபகவன். இப்படம் விரைவில் வெளிவர உள்ளது. அதற்கான விளம்பரம் (டிரைலர்) தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இப்படம் வெளியிடுவதை தடை செய்ய வேண்டும். இந்து அமைப்பினருக்கு ஆதிபகவன் திரைப்படத்தை திரையிட்டுக் காட்டிய பின்னரே வெளியிட வேண்டும் என முதல்வரின் தனிப்பிரிவில் இந்து மக்கள் கட்சியினர் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனர்.

இதுகுறித்து அக்கட்சியின் மாநில அமைப்பாளர் கணபதி ரவி கூறியது: இயக்குநர் அமீரின் இயக்கத்தில் வெளியாக உள்ள ஆதிபகவன் திரைப்படம் இந்து மதத்தை இழிவுபடுத்துவது போலவும், இந்து மக்கள் மனம் புண்படும்படியும் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆகையால் ஆதிபகவன் திரைப்படத்தை இந்து அமைப்புகளுக்கு திரையிட்டுக் காட்டிவிட்டு அதன்பின்னரே படத்தை வெளியிட வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்துள்ளோம் என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» அமீர் வீட்டை முற்றுகையிடச் சென்ற இந்து மக்கள் கட்சியினர் கைது
» கேரளாவில் போராட்டம்: மலையாள நடிகர்களுக்கு தடை விதிக்க வேண்டும்: இந்து மக்கள் கட்சி வற்புறுத்தல்
» திவ்யாவுக்கு எதிராக இந்து மக்கள் கட்சி!
» எம்.எஸ்.சுப்புலட்சுமி வேடம் - கட்டையை போடும் இந்து மக்கள் கட்சி
» 86 பேருக்கு அனுஷ்கா மது விருந்து கொடுத்தார்: இந்து மக்கள் கட்சி கண்டனம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum