கேரளாவில் போராட்டம்: மலையாள நடிகர்களுக்கு தடை விதிக்க வேண்டும்: இந்து மக்கள் கட்சி வற்புறுத்தல்
Page 1 of 1

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு
தெரிவிக்கும் வகையில் மலையாள நடிகர், நடிகைகள் சமீபத்தில் மெழுகுவர்த்தி
ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு இந்து மக்கள் கட்சி கண்டனம்
தெரிவித்துள்ளது.
அக்கட்சியின் மாநில செயலாளர் பி.ஆர். குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
மலையாள நடிகர், நடிகைகளை தமிழ் திரையுலகம்தான் வாழ வைக்கிறது. இங்குள்ள
படங்களில் நடித்து கோடி கோடியாக சம்பாதிக்கின்றனர். நயன்தாரா, அசின், மீரா
ஜாஸ்மின், நவ்யா நாயர், காவ்யா மாதவன், ஜோதிர்மயி, கோபிகா மற்றும் தற்போது
முன்னணி நடிகையாகி உள்ள அமலாபால் மேலும் பல புதுமுக நடிகைகள் கேரளாவில்
இருந்து வந்து தமிழ் படங்கள் மூலம் பிரபலமானவர்கள்.
கேரள நடிகர்களும் தமிழ் படங்களில் நடிக்கின்றனர். தமிழ் நடிகர்,
நடிகைகள் முல்லை பெரியாறு பிரச்சினையில் கருத்து தெரிவிக்காமல் உள்ளனர்.
ஆனால் மலையாள நடிகர்கள் சுரேஷ் கோபி, திலீப், முகேஷ் உள்ளிட்ட பலர் எதிராக
போராட்டம் நடத்தி உள்ளனர். இவர்கள் தமிழ் படங்களில் நடிப்பதற்கு தடை
விதிக்க வேண்டும்.
கேரள வணிக நிறுவனங்கள் அவற்றின் விளம்பர படங்களிலும் தமிழ் நடிகர்,
நடிகைகளை நடிக்க வைத்து விற்பனையை பெருக்கி வருகின்றன. அந்த படங்களில்
தமிழ் நடிகர்கள் நடிக்காமல் புறக்கணிக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» 7 ஆம் அறிவு பட சர்ச்சை வசனம் நீக்கம் இலங்கையில் தமிழ் படங்களை திரையிடக் கூடாது இந்து மக்கள் கட்சி வற்புறுத்தல்
» பெண்களை புகைபிடிக்க தூண்டுவதா? நடிகை சனாகானுக்கு “சிகரெட்” அனுப்பும் போராட்டம் – இந்து மக்கள் கட்சி
» நடுநிசி நாய்கள் படத்தில் ஆபாசம்: கவுதம்மேனன் வீட்டில் நாய்களுடன் போராட்டம்; இந்து மக்கள் கட்சி அறிவிப்பு
» திவ்யாவுக்கு எதிராக இந்து மக்கள் கட்சி!
» ஆதிபகவன் படத்தை இந்து அமைப்பினருக்கு திரையிட்டுக் காட்ட வேண்டும்: இந்து மக்கள் கட்சியினர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum