தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இயக்குநர் மணிரத்னம் வீட்டை முற்றுகையிட்ட விநியோகஸ்தர்கள்

Go down

இயக்குநர் மணிரத்னம் வீட்டை முற்றுகையிட்ட விநியோகஸ்தர்கள் Empty இயக்குநர் மணிரத்னம் வீட்டை முற்றுகையிட்ட விநியோகஸ்தர்கள்

Post  ishwarya Fri Mar 22, 2013 5:21 pm



திரைப்பட இயக்குநர் மணிரத்னம் நஷ்ட ஈடு வழங்கக் கோரி திரைப்பட விநியோகஸ்தர்கள் அவரது வீட்டை சனிக்கிழமை முற்றுகையிட்டனர். இதன் காரணமாக மணிரத்னம் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இது குறித்த விவரம்: மணிரத்னம் தயாரித்து இயக்கிய கடல் திரைப்படம் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி வெளியிடப்பட்டது. இப்படம் வெகு ஜனங்களின் மத்தியில் போதிய வரவேற்பை பெறவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே இப்படத்தை வெளியிட்டதில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக திரைப்பட விநியோகஸ்தர்கள் கூறி வருகின்றனர். இதன் காரணமாக மணிரத்னத்திடம் தொடர்ந்து நஷ்டஈடு கேட்டும் வற்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து மணிரத்னம் வீட்டில் முற்றுகையிட விநியோகஸ்தர்கள் முடிவு செய்தனர். ராஜா அண்ணாமலைபுரம், கிரீன்வேஸ் சாலையில் மணிரத்னம் வீடு மற்றும் தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் அலுவலகமும் உள்ளது. மணிரத்னத்தின் வீட்டை விநியோகஸ்தர்கள் சனிக்கிழமை முற்றுகையிட்டு நஷ்டஈடு வழங்கக் கோரி போராட்டம் நடத்தினர். இதையடுத்து மணிரத்னம் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கடல் பட நஷ்டம்… மணிரத்னம் அலுவலகத்துக்குள் நுழைந்து கோஷமிட்ட விநியோகஸ்தர்கள்!
» வீரப்பனுக்காக வீட்டை விற்ற இயக்குநர்!
» இயக்குநர் மணிரத்னம் குறித்து அவதூறாகப் பேசத் தடை
» இயக்குநர் மணிரத்னம் மீது போலீஸில் புகார்
»  எனது வீட்டை, ஊரில் உள்ள செல்வாக்கான படை பலமும், பணபலமும் மிக்க ஒருவர் அபகரிக்க முயலுகிறார். அதற்காக அவர் அனைத்து தவறான வழிகளையும் கையாளுகிறார். நான் வீட்டை தக்க வைத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum