இயக்குநர் மணிரத்னம் குறித்து அவதூறாகப் பேசத் தடை
Page 1 of 1
இயக்குநர் மணிரத்னம் குறித்து அவதூறாகப் பேசத் தடை
திரைப்பட இயக்குநர் மணிரத்னம் மற்றும் அவரது மனைவி சுகாசினி ஆகியோரின் புகழுக்கும், நற்பெயருக்கும் களங்கம் ஏற்படும் விதத்தில் திரைப்பட விநியோகஸ்தர்கள் யாரும் பேசக் கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக இயக்குநர் மணிரத்னம் மனு தாக்கல் செய்திருந்தார். கடல் திரைப்படத்தின் தரம் குறித்து விநியோகஸ்தர்கள் சிலர் உண்மைக்குப் புறம்பாகப் பேசி வருகின்றனர். இதனால் எங்கள் புகழ் மற்றும் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படுத்துகின்றனர்.
இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி ஆர்.சுதாகர், இயக்குநர் மணிரத்னம் மற்றும் அவரது மனைவி சுகாசினி ஆகியோரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் உண்மைக்குப் புறம்பாக விநியோகஸ்தர்கள் யாரும் பேசக் கூடாது என்று புதன்கிழமை உத்தரவிட்டார்.
மேலும், மணிரத்னத்தின் வீடு மற்றும் அலுவலகத்துக்குள் விநியோகஸ்தர்கள் யாரும் அத்துமீறி நுழைவதற்கும் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மணிரத்னம் தாக்கல் செய்த மற்றொரு மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அவரது வீடு மற்றும் அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது நினைவுகூரத்தக்கது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விஜயகாந்த் குறித்து அவதூறாகப் பேசிய வடிவேலு மீது தேர்தல் ஆணையம் வழக்கு
» இயக்குநர் மணிரத்னம் மீது போலீஸில் புகார்
» இயக்குநர் மணிரத்னம் வீட்டை முற்றுகையிட்ட விநியோகஸ்தர்கள்
» என் கணவர் மீதான வழக்கை விஜயக்குமார் வாபஸ் பெற்றால் சமரசம் பேசத் தயார் – வனிதா
» ஐ படம் குறித்து சங்கர் விளக்கம் .
» இயக்குநர் மணிரத்னம் மீது போலீஸில் புகார்
» இயக்குநர் மணிரத்னம் வீட்டை முற்றுகையிட்ட விநியோகஸ்தர்கள்
» என் கணவர் மீதான வழக்கை விஜயக்குமார் வாபஸ் பெற்றால் சமரசம் பேசத் தயார் – வனிதா
» ஐ படம் குறித்து சங்கர் விளக்கம் .
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum