மீண்டும் காமெடியில் கலக்க வருகிறார் கவுண்டமணி
Page 1 of 1
மீண்டும் காமெடியில் கலக்க வருகிறார் கவுண்டமணி
மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு நகைச்சுவை மன்னர் கவுண்டமணி மீண்டும் நடிக்க வருகிறார்.
1980-90 ஆகிய இடைப்பட்ட காலங்களில் தமிழ் சினிமாவில் தன்னுடைய காமெடியின் மூலம் கலக்கியவர் கவுண்டமணி. இவர் செந்திலுடன் இணைந்து அடிக்கும் லூட்டிகளில் திரையரங்குகளே அதிர்ந்தன. இவரது காமெடிக்கு இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்குமே தனித்தன்மை உண்டு. அந்தளவுக்கு காமெடிக்கு பெயர்போன நடிகர் கவுண்டமணி ஜக்குபாய் படத்துக்குப் பிறகு நடிப்பதை தவிர்த்து வந்தார்.
இடையில் உடல் நலக்குறைவு காரணமாக இரண்டு மூன்று முறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுத் திரும்பினார். இப்போது முழு ஆரோக்கியம் பெற்று விட்டதால் சினிமாவில் நடிக்க டாக்டர்கள் பச்சைக்கொடி காட்விட்டார்கள். இதைத் தொடர்ந்து தீவிரமாக கதை கேட்ட கவுண்டமணி 50 கதைகள் வரை நிராகரித்துவிட்டு தற்போது வாய்மை என்ற படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். பாக்யராஜ் மகன் சாந்தனு, தாமிரபரணி பானு ஜோடியாக நடிக்கிறார்கள். அ.செந்தில்குமார் இயக்குகிறார்.
இதில் கவுண்டமணி டாக்டர் பென்னியாக நடிக்கிறார். டாக்டர் பணியை ஒழுங்காக செய்து கொண்டிருக்கும் கவுண்டமணியை சிலர் சினிமாவில் நடிக்கச் சொல்லி வற்புறுத்துவார்களாம். அதற்கு இவர் அடிக்கும் கவுண்டர் வசனங்கள் முழுநேர காமெடியாக இருக்கும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கவுண்டமணி படம் முழுவதும் வருகிறார். மேலும் இத்திரைப்படத்தில் தியாகராஜன், ராம்கி, ஊர்வசி உட்பட பலர் நடிக்கின்றனர்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மீண்டும் காமெடியில் கலக்க வருகிறார் கவுண்டமணி
» மீண்டும் காமெடியில் கலக்க வருகிறார் கவுண்டமணி
» மீண்டும் கலக்க வருகிறார் வடிவேலு
» மீண்டும் கலக்க வருகிறார் கலாபவன் மணி
» சூர்யாவுடன் கலக்க வருகிறார் பிரேம்ஜி!
» மீண்டும் காமெடியில் கலக்க வருகிறார் கவுண்டமணி
» மீண்டும் கலக்க வருகிறார் வடிவேலு
» மீண்டும் கலக்க வருகிறார் கலாபவன் மணி
» சூர்யாவுடன் கலக்க வருகிறார் பிரேம்ஜி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum