தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தெலுங்கில் இலியானா பெற்ற ரூ.2 கோடி சம்பளம்

Go down

தெலுங்கில் இலியானா பெற்ற ரூ.2 கோடி சம்பளம் Empty தெலுங்கில் இலியானா பெற்ற ரூ.2 கோடி சம்பளம்

Post  ishwarya Fri Mar 22, 2013 5:12 pm



தெலுங்கு படத்தில் நடிப்பதற்காக நடிகை இலியானா ரூ.2 கோடியை சம்பளமாக பெற்றுள்ளார்.

தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவரான இலியானா நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் ‘நண்பன்’ திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து அவர் இந்தியில் நடித்த 'பர்பி' திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானதால் அவருக்கு அடுத்தடுத்து இந்திப்பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

இதனிடையே தெலுங்கில் 'மனம்' எனும் திரைப்படத்தில் இலியானா நடித்தால் நன்றாக இருக்கும் என அவரை அணுகியிருக்கிறார் சம்மந்தப்பட்ட தயாரிப்பாளர். தெலுங்கு படத்தை விட தற்போது பாலிவுட் படத்தில்தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறேன் என்று படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். இறுதியில் தயாரிப்பாளர் ரூ.2 கோடி சம்பளமாக தருவதாக கூறியிருக்கிறார். உடனே நடிக்க சம்மதம் தெரிவித்து கால்ஷீட் கொடுத்தாராம் இலியானா. இது தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளின் மத்தியில் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.

'மனம்' திரைப்படத்தில் நாகார்ஜுன், நாக சைதன்யா ஆகியோர் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum