தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சம்பளம் ரூ.50 லட்சமாக உயர்வு: அஞ்சலிக்கு தெலுங்கில் படங்கள் குவிகிறது

Go down

சம்பளம் ரூ.50 லட்சமாக உயர்வு: அஞ்சலிக்கு தெலுங்கில் படங்கள் குவிகிறது Empty சம்பளம் ரூ.50 லட்சமாக உயர்வு: அஞ்சலிக்கு தெலுங்கில் படங்கள் குவிகிறது

Post  ishwarya Sat May 04, 2013 4:31 pm

வீட்டை விட்டு ஓடியது, தலைமறைவு போன்ற சர்ச்சைகள் நடிகை அஞ்சலியை தெலுங்கு பட உலகில் பிரபலபடுத்தியுள்ளது. சம்பளமும் ரூ.50 லட்சத்தை தாண்டி உள்ளது.

அஞ்சலி முதலில் கன்னட படமொன்றில் அறிமுகமானார். அப்போது அவர் வாங்கிய சம்பளம் ரூ.50 ஆயிரம். பின்னர் மலையாள படமொன்றில் நடித்தார். அதற்கு சம்பளம் ரூ.1 லட்சம் வாங்கினார். தமிழில் கற்றது தமிழ் என்ற படத்தில் அறிமுகமானார். அப்படத்துக்கு சம்பளமே கொடுக்கவில்லை.

அதன் பிறகு ஆயுதம் செய்வோம் என்ற படத்தில் நடித்து ரூ.1 லட்சம் சம்பளம் பெற்றார். எங்கேயும் எப்போதும் படத்தில் நடிக்க ரூ.5 லட்சமும் கருங்காலி படத்தில் டைரக்டர் களஞ்சியம் ஜோடியாக நடிக்க ரூ.8 லட்சமும் பெற்றார். சமீபத்தில் ரிலீசான சேட்டை படத்தில் ஆர்யாவுடன் நடிக்க ரூ.20 லட்சம் பெற்றார். தமிழில் அவர் வாங்கிய அதிக சம்பளம் இதுதான்.

தற்போது தெலுங்கில் வெங்கடேஷ் ஜோடியாக புது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிக்க அவருக்கு ரூ.50 லட்சம் சம்பளம் கொடுத்துள்ளனர். ரவிதேஜா ஜோடியாக “பலுபு” என்ற படத்தில் நடிக்கிறார். இதற்கும் கனிசமான சம்பளம் பேசியுள்ளார். பவன் கல்யாண் ஜோடியாக நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கு ரூ.60 லட்சம் சம்பளம் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தெலுங்கு பட வாய்ப்புகள் குவிகிறது.

தமிழ் படங்களை விட தெலுங்கில் கூடுதல் சம்பளம் கிடைப்பதால் ஐதராபாத்திலேயே தங்கி விட முடிவு செய்துள்ளார். தமிழ் படங்களில் நடிப்பதில்லை என்று முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum