தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இரட்டை வேடத்துடன் மீண்டும் களமிறங்கும் வடிவேலு

Go down

இரட்டை வேடத்துடன் மீண்டும் களமிறங்கும் வடிவேலு Empty இரட்டை வேடத்துடன் மீண்டும் களமிறங்கும் வடிவேலு

Post  ishwarya Fri Mar 22, 2013 5:06 pm



போச்சே போச்சே.. கைப்புள்ள.. வட போச்சே.. என்ன சின்னப்பிள்ளத் தனமா இருக்கு.. என சாதாரண வார்த்தைகளை, பிரபலமாக்கிய பெருமை வடிவேலையே சேரும்.

நகைச்சுவையில் தனக்கென தனி முத்திரை பதித்த வடிவேலு, 2011ஆம் ஆண்டு தேர்தலில் திமுக தோல்வி அடைந்த பிறகு தமிழ் படங்களில் நடிக்கவில்லை.

சுமார் இரண்டு வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு தற்போது தெனாலி ராமன் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படத்துக்கான படப்பிடிப்பு மார்ச் மாதம் துவங்க உள்ளது. பெரிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ் படத்தில் களமிறங்கியுள்ள வடிவேலுவுக்கு இப்படம் மற்றொரு சிறப்பையும் அளித்துள்ளது.

உண்மையில் அதுதான் இன்றைய முக்கிய செய்தியே. அதாவது, இப்படத்தில் வடிவேலு இரட்டை வேடங்களில் நடிக்கிறார்.

பட்டா பட்டி பட இயக்குநர் யுவ்ராஜ் இப்படத்தை இயக்குகிறார். இதனை ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

இது சாதாரண வெடியாக இருக்குமா அல்லது இரட்டை வெடியாக இருக்குமா என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum