தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மீண்டும் களமிறங்கும் பாக்கியராஜ்!

Go down

மீண்டும் களமிறங்கும் பாக்கியராஜ்!  Empty மீண்டும் களமிறங்கும் பாக்கியராஜ்!

Post  ishwarya Fri Mar 22, 2013 12:44 pm

பாக்யராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படம் சித்து +2. அவரது மகன் சாந்தனு நடித்த அப்படம் சரியான வரவேற்பை பெறவில்லை.

இந்நிலையில் மீண்டும் பாக்யராஜ் ஒரு படத்தினை இயக்க திட்டமிட்டு இருக்கிறார். அப்படத்தின் தகவலை அன்னக்கொடியும் கொடிவீரனும் இசை வெளியீட்டு விழாவில் அறிவித்தார்.

அந்த விழாவில் பாக்யராஜ் பேசியது " எங்க இயக்குனர் பாரதிராஜாவுக்கு கோபம் அதிகம், அதுவே அவரது பலம் மற்றும் பலவீனம்.

சினிமாவை அவரிடமிருந்துதான் நான் கற்றுக்கொண்டேன். என்னை முதல் திரைப்படத்தில் அறிமுகப்படுத்தியவரும் அவரே. என்னை ஹீரோவாக்கியவரும் அவரே. நான் இயக்குநரானதும் அவரால்தான்.

அவருக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். தற்போது 'துணை முதல்வர் அன்னபோஸ்ட்' என்ற படத்தை இயக்கி வருகிறேன். விவரங்களை விரைவில் அறிவிப்பேன் " என்று பேசினார்.

அப்படத்தில் யார் நடிக்கிறார்கள், யார் தயாரிக்கிறார் என்ற எந்த ஒரு தகவலையும் அவர் தெரியப்படுத்தவில்லை.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum