தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வனயுத்தம்: முத்துலட்சுமிக்கு உடனடியாக ரூ.10 லட்சம்தான் கொடுக்க முடியும்

Go down

வனயுத்தம்: முத்துலட்சுமிக்கு உடனடியாக ரூ.10 லட்சம்தான் கொடுக்க முடியும் Empty வனயுத்தம்: முத்துலட்சுமிக்கு உடனடியாக ரூ.10 லட்சம்தான் கொடுக்க முடியும்

Post  ishwarya Fri Mar 22, 2013 4:59 pm



"வனயுத்தம்' திரைப்பட விவகாரத்தில் வீரப்பன் மனைவி முத்துலட்சுமிக்கு தர வேண்டிய நிவாரணத் தொகையை உடனடியாக கொடுக்க முடியாத சூழலில் இருப்பதாக அப்படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான ஏ.எம்.ஆர்.ரமேஷ் தெரிவித்தார். ரூ.10 லட்சத்தை இப்போதும், ரூ.15 லட்சத்தை ஒரு வார காலத்துக்குள் கொடுக்கவும் அவர் சம்மதம் தெரிவித்துள்ளார்.

"வனயுத்தம்' திரைப்படத்தில் இடம் பெறும் காட்சிகள், எனது தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கும் வகையில் உள்ளது எனவும், நான் ஆட்சேபித்த சில காட்சிகள் முழுமையாக படத்திலிருந்து நீக்கப்படவில்லை எனவும் கூறி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார் முத்துலட்சுமி.

இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் முத்துலட்சுமிக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் அளித்துவிட்டு, "வனயுத்தம்' திரைப்படத்தை வெளியிட்டுக் கொள்ளலாம் என வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில் "வனயுத்தம்' படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளருமான ஏ.எம்.ஆர்.ரமேஷ் சென்னையில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:

"வனயுத்தம்' திரைப்படத்தில் யாருடைய வாழ்வும் தவறாக சித்திரிக்கப்படவில்லை. வீரப்பன் என்ற மனிதனின் வாழ்வில் என்ன நடந்ததோ, அதை தகுந்த ஆதாரங்களுடன் சொல்லியிருக்கிறேன். அனைத்து ஆதாரங்களும் என் வசம் இருக்கின்றன.

படத்தை வெளியிட முத்துலட்சுமி முதலில் கேட்ட தொகை ஒன்றரை கோடி ரூபாய். அதை கொடுக்க முடியாத சூழலால், முத்துலட்சுமி நீக்க சொன்ன அனைத்து காட்சிகளையும் நீக்கி விட்டோம். இருந்தும் அவர் தொடர்ந்து பிரச்னைகளை உண்டாக்கி வந்தார்.

ஏற்கெனவே கடன் வாங்கித்தான் இப்படத்தை எடுத்துள்ளேன். அதனால் இப்போது ரூ.25 லட்சத்தை திருப்பிக் கொடுக்க முடியாத சூழலில் இருக்கிறேன்.

ரூ.10 லட்சத்தை இப்போதும், மீதித் தொகையை ஒரு வார காலத்துக்குள்ளும் கொடுக்கிறேன். வீரப்பன் சம்மந்தப்பட்ட அனைவரையும் பேட்டி கண்டு, காவல் துறையினரிடம் விசாரித்து, பத்திரிகைகளில் வந்த செய்திகளின் அடிப்படையில் மட்டுமே இப்படத்தை உருவாக்கி இருக்கிறேன்.

இது எப்படி முத்துலட்சுமியின் வாழ்க்கையைப் பாதிக்கும். உண்மை சம்பவத்தை படமாக்க ஒரு படைப்பாளிக்கு உரிமை இல்லாத நிலைதான் இப்போது இருக்கிறது. இப்படியே பிரச்னைகள் தொடர்ந்தால் எந்த சம்பவத்தையும் படமாக்க முடியாது என்றார் ஏ.எம்.ஆர்.ரமேஷ்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum