வனயுத்தம் படத்துக்கு தடை நீக்கம்
Page 1 of 1
வனயுத்தம் படத்துக்கு தடை நீக்கம்
சென்னை : ‘வனயுத்தம்’ படத்துக்கான தடையை நீக்கி சென்னை ஐகோர்ட் நேற்று தீர்ப்பளித்தது. ‘குப்பி’, ‘காதலர் குடியிருப்பு’ படங்களை இயக்கியவர் ஏஎம்ஆர். ரமேஷ். இவர் தமிழ், கன்னடத்தில் தயாரித்து இயக்கியுள்ள படம், ‘வனயுத்தம்’. வீரப்பன் கதையான இதில் அர்ஜுன், கிஷோர், விஜயலட்சுமி உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு வீரப்பன் மனைவி முத்துலட்சுமி எதிர்ப்பு தெரிவித்து, சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த கோர்ட் ‘வனயுத்தம்’ படத்துக்கு இடைக்கால தடை விதித்தது. இதை எதிர்த்து ஏஎம்ஆர். ரமேஷ், சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கை நீதிபதி ராமநாதன் விசாரித்தார்.
ரமேஷ் சார்பாக முத்த வழக்கறிஞர் ஏ.நடராஜன் ஆஜராகி, ‘வீரப்பன் மீதான வழக்குகள் தொடர்பான விவரங்களை சேகரித்துதான் இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான செய்திகள் பத்திரிகைகளில் வெளியாகி இருக்கிறது. இது திரைப்படமாக வந்தால் எனது குடும்பத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் என்று முத்துலட்சுமி கூறுவது தவறு. அதற்காக கீழ்கோர்ட் படத்துக்கு தடைவிதித்துள்ளது. தேவைப்பட்டால் வீரப்பனும் முத்துலட்சுமியும் சந்திக்கும் காட்சியை படத்தில் இருந்து நீக்குகிறோம்’ என்று வாதிட்டார்.
இந்த வழக்கில் முத்துலட்சுமி பதில் மனு தாக்கல் செய்தார். தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளிவைத்திருந்தார். இவ்வழக்கில் நேற்று தீர்ப்புக் கூறப்பட்டது. நீதிபதி ராமநாதன் தனது தீர்ப்பில், ‘முத்துலட்சுமியின் கோரிக்கையை ஏற்று கீழ்கோர்ட் விதித்த தடையை நீக்கிவிடுகிறேன். தங்கள் பெயருக்கு களங்கம் ஏற்படும் என முத்துலட்சுமி கூறுவதால், அவர் சம்மந்தப்பட்ட சில காட்சிகளை நீக்க தயாரிப்பாளர் ஒப்புகொண்டுள்ளார். அதை நீக்கிவிட்டு படத்தை திரையிட அனுமதிக்கிறேன்’ என்றார்.
இதையடுத்து, படத்தை வரும் 15,ம் தேதி திரையிட இருப்பதாக ஏஎம்ஆர் ரமேஷ் தெரிவித்தார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» முத்துலட்சுமி எதிர்ப்பு எதிரொலி: வனயுத்தம் படத்தில் விஜயலட்சுமி காட்சிகள் அடியோடு நீக்கம்
» கோர்ட்டு உத்தரவுப்படி முத்துலட்சுமி காட்சி நீக்கம்: வீரப்பன் பற்றிய வனயுத்தம் படம் 15-ந்தேதி ரிலீஸ்
» ‘மாஞ்சா வேலு’ படத்துக்கு தடை நீக்கம்!
» சிங்களருக்கு எதிரான வசனம் நீக்கம் “7ஆம் அறிவு படத்துக்கு இலங்கையில் அனுமதி
» வனயுத்தம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum