நெல்வயல்களை தாக்கும் ஆனைக்கொம்பன் ஈ
Page 1 of 1
நெல்வயல்களை தாக்கும் ஆனைக்கொம்பன் ஈ
பருவமழை துவக்கம் காரணமாக நெல்வயல்களை ஆனைக்கொம்பன் ஈ தாக்கும் ஆபாயம் ஏற்பட்டுள்ளது.
பள்ளிபாளையம் வட்டாரத்தில் உள்ள ஆலாம்பாளையம், களியனூர், எலந்தகுட்டை, தட்டாங்குட்டை, போன்ற பகுதிகளில் ஐஆர் 20 ரக நெல்பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பூச்சியானது பொன்னி, பி.பி.டி., ஏ.டி.டி 45, 43 உள்ளிட்ட ரகங்களையும் பாதிக்கும். இந்த ரக நெல்லை அதிக அளவில் ஆனைக்கொம்பன் ஈக்கள் தாக்கி சேதத்தை ஏற்படுத்தும்.
தற்போது துவங்கியுள்ள பருவமழையால் இந்த ஈக்கள் அதிகம் உற்பத்தியாகும் வாய்ப்பு உள்ளது.
ஆனைக்கொம்பன் ஈ ஒரு கொசு அளவில், அடிவயிறு சிவந்து காணப்படும்.
ஈ வகையைச் சேர்ந்த இந்தப் பூச்சி மஞ்சள் கலந்த ஆரஞ்சு நிறமாகவும், கொசுவைப் போன்று சிறியதாகவும், நீண்ட கால்களுடனும் இருக்கும்.
இந்த ஈ இருந்தால், தூர்களுக்குப் பதிலாகக் கொம்பு போன்ற கிளைப்புகள் தோன்றும். கிளைப்புகள் வெண்மையாகவோ அல்லது இளம் சிவப்பு நிறமாகவோ குழல் போன்று வெங்காய இலையைப்போலத் தோன்றும்.
யானைத் தந்தத்தைப் போன்று குழலாகக் காணப்படுவதால் ஆனைக்கொம்பன் என்ற பெயர் பெற்றுள்ளது.
இரவில் மிகுந்த சுறுசுறுப்பாக இருக்கும் இந்த பூச்சிகள், சராசரியாக 150 முட்டைகள் வரை இலைகளில இடும்.தாள்களின் மேல் புறமும், தேங்கிய தண்ணீரிலும் இடும். இதன் வாழ்க்கை சுழற்சி 20 முதல் 25 நாள்கள் ஆகும்.
இதிலிருந்து வெளியாகும் புழுக்கள் நெல் பயிர்களின் குறுத்துகளை துளைத்து குழால்களாக மாற்றிவிடும்.
இதனால் பயிரின் தூர்களில் நெற்கதிர்கள் உருவாகாது. இதனால் விவசாயிகளுக்கு உற்பத்தி இழப்பு ஏற்படும்.
நெல் நடவு செய்த 35 முதல் 45 நாட்களில்தான் இந்த புழுக்களின் தாக்குதல் அதிகம் காணப்படும்.
அதிகம் தழைச்சத்து தரும் யூரியா, களர் நிலங்களில் உள்ள பயிர்களை இந்த ஈக்கள் அதிகம் தாக்கும்.
கட்டுபடுத்தும் முறைகள்
பரிந்துரை அளவுக்கும் மேல் தழைச்சத்துரங்களை சேர்க்க கூடாது.
ஆனைக்கொம்பனின் இயற்கை எதிரிகளான நீள்தாடை சிலந்தி, வட்டசிலந்தி, தாவும் சிலந்தி, ஊசித்தட்டான், குளவி போன்றவற்றை அழிக்காமல் பாதுகாக்கவேண்டும்.
இதைத் தடுக்க பிளேட்டை கேஸ்டர் ஒரைசே எனும் புழு ஒட்டுண்ணி இயற்கையிலேயே இந்தப் பூச்சியைக் கட்டுப்படுத்துகிறது. இந்த ஒட்டுண்ணிகள் கொண்ட தூர்களைச் சேகரித்து பத்து சதுர மீட்டருக்கு ஒன்று என்ற அளவில் வயலில் பரப்பலாம்.
மேலும், பொரேட் என்ற குருணை மருந்தை ஓர் ஏக்கருக்கு 4 கிலோ அல்லது பிப்ரோனில் 10 கிலோ (தூவும்) தூளை வயலில் இடவும்.
பாதிக்கப்பட்ட செடிகளை உடனே அடிவேரோடு நறுக்கி அழிக்க வேண்டும்.
நெல் பயிர்களின் அடியில் வேப்பம் புண்ணாக்கு அதிகமாக இடவும்.
ஈ தாக்குதல் 10 சதத்தை கடந்திருந்தால் குளோர்பைரிபாஸ் போன்ற பூச்சிகொல்லி மருந்துகளை வேளாண்மைத்துறையினரின் பரிந்துரையின் பேரில் தெளிக்கலாம்.
ஒருங்கிணைந்த முறையை பின்பற்றினால் இந்த ஈயை முற்றிலுமாக அழித்துவிடலாம்.
இவ்வாறு பள்ளிபாளையம் வேளாண்மை உதவி இயக்குனர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» வெங்காயதை தாக்கும் நோய்கள்
» குழந்தைகளை தாக்கும் பல் நோய்கள்
» யுவனைத் தாக்கும் தயாரிப்பு
» வெங்காயதை தாக்கும் நோய்கள்
» கேழ்வரகை தாக்கும் குலைநோய்
» குழந்தைகளை தாக்கும் பல் நோய்கள்
» யுவனைத் தாக்கும் தயாரிப்பு
» வெங்காயதை தாக்கும் நோய்கள்
» கேழ்வரகை தாக்கும் குலைநோய்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum