கோடையில் தாக்கும் கண் நோய்கள்!
Page 1 of 1
கோடையில் தாக்கும் கண் நோய்கள்!
கோடைகாலம் என்றாலே நம்மில் பலருக்கும் சந்தோஷம். பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை நாட்கள். அந்த விடுமுறையை மகிழ்ச்சியோடு கொண்டாட சுற்றுலா செல்ல அனைவரும் ஆவலாக எதிர்நோக்கும் தருணம் இது. எனினும் அனைவரும் சுட்டெரிக்கும் சூரியனால் ஏற்படும் வெப்பத்தை தாங்கிக் கொள்ள வேண்டியுள்ளது.
அதனால் எப்போதுதான் இந்த கோடைகாலம் முடியுமோ என்று சிலரை நினைக்கவும் வைத்து விடுகிறது. கோடைகாலத்தில் நம் உடலில் வெப்பத்தின் காரணமாக பல தாக்கங்கள் ஏற்படும். குறிப்பாக அதிகமான வெப்பம் மற்றும் தூசியினால் கண்ணில் ஒவ்வாமை (அலர்ஜி) தொந்தரவுகள் ஏற்படலாம்.
இதனால் கண்கள் சிவந்து அரிப்பு ஏற்பட்டு கண்ணில் நீர் வடிதல், உறுத்தல் உண்டாகும். மற்றும் பலருக்கு கண்ணில் தொற்று நோய் (மெட்ராஜ் ஐ) ஏற்படலாம். கண்களில் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டதும் மருந்துக் கடைகளில் தானே சொட்டு மருந்துகளையோ அல்லது களிம்புகளையோ வாங்கி கண்ணில் போடக் கூடாது.
கண் மருத்துவரை நாடி அதற்குரிய சிகிச்சையை பெற வேண்டும். கோடைகாலத்தில் கண் பாதிப்பு அடையாமல் இருப்பதற்கு நாம் வெளியில் செல்லும்போது கருப்பு கண்ணாடி அல்லது சாதாரண கண்ணாடி அணிந்து செல்வது நல்லது. கண்ணாடி அணிவதனால் நமக்கு பல நன்மைகள் உண்டாகும்.
சூரிய ஒளியிலிருக்கும் தீய புற ஊதாக் கதிர்களால் கண்ணில் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கலாம். சூரிய ஒளியிலிருக்கும் தீய கதிர்களால் கண்ணில் புரை மற்றும் விழித்திரை பாதிப்புகள் ஏற்படலாம். அதையும் தவிர்க்கலாம். சூரிய வெப்பத்தின் காரணமாக கண்கள் வறண்டு நீர் பசையின்றி போகலாம்.
இதனால் கண்ணில் உறுத்தல், எரிச்சல் ஏற்பட்டு சிவந்து போவதை ஓரளவு தடுக்கலாம். தற்போது கிடைக்கும் கண்ணாடிகள் அனைத்துமே பெருமளவிற்கு சூரிய ஒளியிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்களை விலக்க செய்கின்றன. இதனால் கண்கள் பாதுகாக்கப்படுகின்றன. கோடைகாலத்தில் தாகத்தை தணித்துக் கொள்ள நீர் பானங்களை நாம் விரும்பி அருந்துவோம்.
இதிலும் கவனம் தேவை. சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரைக் கொண்டு தயாரிக்கப்படும் பானங்களை நாம் அருந்த வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் வயிற்றுப்போக்கு மற்றும் வேறு தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இவைகளாலும் கண்ணில் பாதிப்பு ஏற்படலாம். கண்களில் தொற்றுநோயும் ஏற்படலாம். கண்களில் ஒவ்வாமை, தொற்று நோய், கண்கட்டி, உலர்ந்த தன்மை ஆகியவை கோடைகாலத்தில் ஏற்படும் முக்கியமான கண் பாதிப்புகள் ஆகும். இவ்வாறு பாதிப்புகள் ஏற்படும் போது கண் மருத்துவரை நாடி அதற்கு தகுந்த சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டும்.
கோடைகாலத்தில் குழந்தைகளுக்கு விடுமுறை என்பதால் கண் பரிசோதனை செய்து கொள்வது பரிந்து ரைக்கத்தக்கதாகும். குறிப்பாக குழந்தைகளுக்கு பார்வைக்குறைவு, மாறுகண் போன்ற பிரச்சினைகள் இருந்தால் கண் மருத்துவரிடம் பரிசோதனை செய்து சரி செய்து கொள்ளலாம்.
இந்த கோடை விடுமுறையில் வெப்பத்தின் காரணமாக சர்க்கரை நோயாளிகளும் கண் பரிசோதனை செய்து கொள்ளலாம். இவ்வாறு செய்து கண்ணில் சர்க்கரை நோயினால் விழித்திரைப் பாதிப்பு (ரெட்டினோபதி) கண்டறியப்பட்டால் அதற்குரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். பொதுவாக 40 வயதுக்கு மேல் சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.
இதே போன்று கண்களில் சர்க்கரை நோயினால் விழித்திரை பாதிப்பு மற்றும் உயர் கண் நீர் அழுத்த நோய் (க்ளோக்கோமா) ஏற்படலாம். எனவே 40 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கண் பரிசோதனை செய்து கொண்டு கண்ணில் ஏதும் பாதிப்பு இருந்தால் அதன் ஆரம்பகட்டத்திலேயே கண்டறிந்து அதற்கு தகுந்த சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.
இந்த பொன்னான விடுமுறை காலத்தில் உடல் நலத்தை பாதுகாத்து கொள்வதில் அக்கறை செலுத்தினால் விடுமுறையை நன்கு கொண்டாடலாம். கோடை காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கண் நலனில் அக்கறை கொள்ள வேண்டும். கோடை வெயில் கண்களை தாக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வெங்காயதை தாக்கும் நோய்கள்
» கோடையில் எது சூடு எது குளிர்?
» குழந்தைகளை தாக்கும் பல் நோய்கள்
» பருவநிலை மாற்றத்தால் நெல்பயிரைத் தாக்கும் நோய்கள்
» சீட்டை விட்டு நகராத வேலையா? சர்க்கரை, இதய நோய்கள் தாக்கும் சீனியர்கள், மேனேஜர்கள் உஷார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum