நெற்பயிரைத் தாக்கும் பூச்சிகள்…
Page 1 of 1
நெற்பயிரைத் தாக்கும் பூச்சிகள்…
நெற்பயிரை நடவு செய்தது முதல் வளர்ந்து கதிர் வருவதுவரை பல்வேறு பூச்சிகள் தாக்குகின்றன. இந் நெற்பயிரை தாக்கும் பூச்சிகளை சரியான அளவில் பூச்சிக் கொல்லி மருந்துகளை உபயோகித்து அழிக்க வேண்டும்.
நெற்பயிர்களில் இலைப்பேன் என்ற பூச்சி நாற்றங்கால் மற்றும் நடவு வயல்களில் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த பூச்சிகள் இளம் இலைகளை சுரண்டி சாற்றை உறிஞ்சும். இந்த பூச்சிகளை பாஸ்போபிடான், மோனோகுரோட்டோபாஸ், எண்டோ சல்பான் ஆகிய மருந்துகளை தெளித்து கட்டுப்படுத்தலாம்.
தண்டுத் துளைப்பான் தாக்கும்போது நுணிக் குருத்து காய்ந்துவிடும். இப் பூச்சிகளை அழிக்க தொடர்ச்சியாக வயலில் நீர் தேங்குவதைத் தவிர்க்க வேண்டும். பாதிக்கப்பட்ட கதிர்களை பிடுங்கி அகற்ற வேண்டும்.விளக்குப் பொறிகளை அமைத்து அப் பூச்சிகளை அழிக்கலாம்.
நெற் பயிர்கள் வளர்ந்து வரும்போது கூட்டுப் புழுக்கள் இலையில் உள்ள பச்சையத்தை தின்றுவிடும். இதனால் பயிர் வெள்ளை நிற சருகுபோல் மாறிவிடும். எண்டோசல்பானுடன் மண்ணெண்ணெயை கலந்து தெளித்து இந்த புழுக்களை கட்டுப்படுத்தலாம்.
வெட்டுப் புழுக்கள் நாற்றுகளை அதிக அளவில் வெட்டித் திண்ணும். இரவு நேரங்களில் இந்த புழுக்கள் கூட்டம், கூட்டமாக அருகே உள்ள வயல்களுக்குச் செல்லும். பாசன நீருடன் மண்ணெண்ணெய் கலப்பதன் மூலம் இதனை கட்டுப்படுத்தலாம். வயலில் வாத்துக்களை விட்டும் இப் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.
இலை சுருட்டுப் புழு இலைகளை சுருட்டி அதில் உள்ள பச்சையத்தை உண்ணும் தன்மை கொண்டது. இது தாக்கப்பட்டால் பயிர் வளர்ச்சி குன்றி கதிர் வராது. எண்டோசல்பான், மோனோகுரோடோபாஸ் தெளித்து இப் பூச்சிகளை கடுப்படுத்தலாம்.
இதுபோல் பல்வேறு வகையான பூச்சிகள் நெற்பயிர்களை தாக்குகின்றன. இவைகளை கட்டுப்படுத்துவதற்காக பூச்சிக் கொல்லி மருந்துகளை பயன்படுத்தும்போது விவசாயிகள் சரியான அளவில் பயன்படுத்த வேண்டும்.அதிக பூச்சிக் கொல்லி மருந்துகளை பயன்படுத்துவதால் மண்ணின் வளம் பாதிக்கப்படும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நெற்பயிர்களை தாக்கும் பூச்சிகள் தடுக்க யோசனைகள்
» வயிற்றுப் பூச்சிகள்
» மூட்டுப் பூச்சிகள் அகல
» பூச்சிகள் குறைய
» பூச்சிகள் குறைய
» வயிற்றுப் பூச்சிகள்
» மூட்டுப் பூச்சிகள் அகல
» பூச்சிகள் குறைய
» பூச்சிகள் குறைய
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum