தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சிகிச்சைக்குப் பின் கேரளம் திரும்பினார் நடிகர் ஜெகதி

Go down

சிகிச்சைக்குப் பின் கேரளம் திரும்பினார் நடிகர் ஜெகதி Empty சிகிச்சைக்குப் பின் கேரளம் திரும்பினார் நடிகர் ஜெகதி

Post  ishwarya Fri Mar 22, 2013 2:22 pm

வேலூர் சிஎம்சியில் கடந்த 10 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த கேரள சிரிப்பு நடிகர் ஜெகதி ஸ்ரீகுமார், உடல்நலம் தேறியதை அடுத்து குடும்பத்தினருடன் வியாழக்கிழமை கேரளம் புறப்பட்டுச் சென்றார்.
மலையாளத் திரையுலகில் பிரபல நடிகராக விளங்கி வரும் அவர், கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் காரில் சென்றபோது விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தார். உடனடியாக அவர் கோழிக்கோட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதைத் தொடர்ந்து அவருக்கு பல அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டிய நிலையில், வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மாற்றப்பட்டார்.
அவருக்கு சிஎம்சி மருத்துவர்கள் கடந்த 10 மாதங்களாக தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். அவர் மருத்துவமனையில் இருந்தபோது அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் சந்தித்துச் சென்றனர்.
தொடர் சிகிச்சையை அடுத்து அவருக்கு நினைவு திரும்பியதுடன், விபத்தில் பலத்த சேதமடைந்த உடல் உறுப்புகள் அறுவை சிகிச்சைக்கு பிறகு சீராக இயங்கத் தொடங்கின. வீட்டில் இருந்தபடியே பிஸியோதெரபி பயிற்சி மேற்கொள்ளலாம் என்ற நிலையை அவர் எட்டியதை அடுத்து சொந்த ஊருக்கு அனுப்ப சிஎம்சி மருத்துவர்கள் குழு முடிவு செய்தது. அதையடுத்து ஜெகதி வியாழக்கிழமை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum