தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தென்னகம் திரும்பினார் பி‌ரியங்கா சோப்ரா

Go down

தென்னகம் திரும்பினார் பி‌ரியங்கா சோப்ரா Empty தென்னகம் திரும்பினார் பி‌ரியங்கா சோப்ரா

Post  ishwarya Thu Mar 07, 2013 12:32 pm


தமிழன்... திரையுலகுக்கு நுழைந்த ஆரம்ப காலத்தில் பி‌ரியங்கா சோப்ரா நடித்த ஒரே தமிழ்ப் படம். நடிக்கத் தெ‌ரியாத காலகட்டத்தில் பி‌ரியங்கா நடித்தது. ஆச்ச‌ரியம் என்னவென்றால் தென்னக மொழிகளில் அவர் நடித்த ஒரே படமும் இதுதான்.

அவ்வப்போது தமிழ் சஞ்சிகைகள் அவரை அணுகும் போது ஓ... தமிழன் படம், ஓ... விஜய்... என்று பல ஓ க்கள் போட்டு தமிழனை நினைவுகூர்வார், விஜய்யுடன் மீண்டும் நடிக்க ஆசையாக இருக்கிறது என்று பத்தி‌ரிகைகளுக்கு தீனி போடுவார். மற்றபடி தெற்குப் பக்கம் வருவதற்கு பி‌ரியங்கா பி‌ரியமோ ஆர்வமோ காட்டியதில்லை.

இந்தியில் ஸன்சீர் படத்தை ‌ரிமேக் செய்கிறார்கள். தெலுங்கு மார்க்கெட்டின் விஸ்தீரணம் பு‌ரிந்து இந்தி, தெலுங்கு என இரு மொழிகளில் இந்த ‌ரிமேக் உருவாகிறது. இப்போது பி‌ரியங்கா குறித்த செய்தியின் காரணம் பு‌ரிந்திருக்குமே.

எஸ், இந்த இரு மொழி ‌ரிமேக்கில் பி‌ரியங்காதான் ஹீரோயின், ஹீரோ ராம் சரண் தேஜா. இது பி‌ரியங்காவின் முதல் தெலுங்குப் படம் தெற்குப் பிராந்தியத்தைப் பொறுத்தவரை இரண்டாவது.

விரைவில் பி‌ரியங்காவின் ஓ சிரஞ்சீவிகாரு... ஓ மௌலிகாரு.... ஓ மகேஷ்பாபுகாரு... பேட்டிகள் தெலுங்கில் வெளிவரும், உஷாராக இருங்கள்.
பிரியங்கா சோப்ரா, தமிழன்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum