தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விட்டுக் கொடுத்தது போதும்: ரஜினியின் அரசியல் எதிர்பார்ப்பு போஸ்டர்கள்

Go down

விட்டுக் கொடுத்தது போதும்: ரஜினியின் அரசியல் எதிர்பார்ப்பு போஸ்டர்கள் Empty விட்டுக் கொடுத்தது போதும்: ரஜினியின் அரசியல் எதிர்பார்ப்பு போஸ்டர்கள்

Post  ishwarya Fri Mar 22, 2013 1:39 pm



ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இது ரசிகர்களின் நேற்றைய,இன்றைய விருப்பமோ கிடையாது. 1996ம் ஆண்டிலிருந்தே இந்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே காணப்படுகின்றனர். ஆனால் ரஜினியோ தேர்தல் சமயத்தில் மட்டும் ஏதாவது ஒரு கட்சிக்கு வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவை தெரிப்பதோடு சரி ,தன்பாட்டுக்கு இருந்து விடுகிறார். அரசியல் முடிவை பொறுத்தவரையில் தொடர்ந்து மௌனம் காத்தே வருகிறார்.

இன்றைய அரசியல் நடப்புகள் வரை தெரிந்து வைப்பதில் ஆர்வம் காட்டி வரும் இவர் ரசிகர்களின் விருப்பத்தை பெரிதாக பொருட்படுத்தியதாக தெரியவில்லை. இதனையும் தாண்டி 2008ல் ரஜினி அரசியலில் குதிக்குமாறு போஸ்டர்கள் அடித்து ஒட்டிய ரசிகர்கள் தனிக்கட்சியும் ஆரம்பித்தார்கள். அதில் ரஜினி இருப்பது போன்ற கொடியினையும் தயார் செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஜினி, என்னை அரசியலுக்கு வருமாறு யாரும் கட்டாயப்படுத்த முடியாது. அதேபோல் நான் வருவதை யாராலும் தடுக்கவும் முடியாது என்று அறிக்கை வெளியிட்டார். மேலும் தனது அனுமதி இல்லாமலேயே கட்சி ஆரம்பித்த ரசிகர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தார். சிலர் ரசிகர் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டார்கள்.

இந்த நிலையில் சிறிது காலம் மௌனம் காத்து வந்த ரசிகர்கள் இப்போது மீண்டும் ரஜினி அரசியலில் ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்த தொடங்கியுள்ளனர். இதன் ஆரம்பமாக சென்னை உள்பட பிற மாவட்டங்களில் ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். கோட்டைக்குள் இருந்து ரஜினி நடந்து வருவது போன்ற படத்துடன் விட்டுக் கொடுத்தது போதும். அதேபோல், பொறுத்திருங்கள் 2016ல் முதல்வர் ஆவேன் என்ற வாசகம் அடங்கிய பேப்பரை ரஜினி பிடித்திருப்பது போன்று இன்னொரு போஸ்டரையும் ஒட்டியுள்ளனர். எனவே இந்த முறையாவது ரஜினி தனது முடிவில் இருந்து மாறுவாரா அல்லது ரசிகர்களின் விருப்பத்திற்கு மீண்டும் ஒருதடவை கடிவாளம் போடுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum