தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எதிர்கால திட்டம் எதுவும் இல்லை: நடிகர் விஜய்

Go down

எதிர்கால திட்டம் எதுவும் இல்லை: நடிகர் விஜய் Empty எதிர்கால திட்டம் எதுவும் இல்லை: நடிகர் விஜய்

Post  ishwarya Fri Mar 22, 2013 1:37 pm



"எதிர்கால திட்டம் எதுவும் இல்லை' என்று விழுப்புரத்தில் 11 ஏழை ஜோடிகளுக்கு இலவசத் திருமணத்தை புதன்கிழமை நடத்தி வைத்து நடிகர் விஜய் பேசினார்.

விழுப்புரத்தில், விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் 11 ஏழை ஜோடிகளுக்கு இலவசத் திருமணம் செய்து வைக்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. விழா நடைபெற்ற, சென்னை சாலையிலுள்ள திருமண மண்டபத்துக்கு நடிகர் விஜய் காலை 10.15 மணிக்கு வந்தார். காலை 10.57க்கு மணமகன்களுக்கு தாலியை எடுத்துக் கொடுத்து திருமணத்தை விஜய் நடத்தி வைத்தார்.

மணமக்களுக்கு பீரோ உள்ளிட்ட 51 வகையான சீர்வரிசைகள் வழங்கி நடிகர் விஜய் பேசியது: இவ்விழாவில் பங்கேற்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. திடீரென இலவசத் திருமணம் செய்து வைப்பதால், விஜய் எதிர்காலத்தில் ஏதாவது திட்டம் வைத்திருக்கிறாரோ என்று யாரும் தவறாக நினைக்க வேண்டாம் என்றார். இவ்வாறு விஜய் பேசிக்கொண்டிருக்கும்போதே, மேடையில் ரசிகர்கள் கூட்டம் வந்ததால், விஜய் பேச்சை பாதியில் முடித்து விட்டு, 11.05க்கு மண்டபத்தின் பின்பகுதி வழியாக வெளியேறினார்.

ரசிகர்கள் காயம்: மண்டபத்தினுள் விஜய் வந்தபோதும், வெளியேறியபோதும் அவரைக் காண ரசிகர்கள் நெருக்கியடித்துக் கொண்டு முன்னேறியதால் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் மண்டபத்தின் கண்ணாடிக் கதவு, பிளாஸ்டிக் இருக்கைகள் உடைக்கப்பட்டன. இச்சம்பவத்தில் ரசிகர்கள் சிலர் காயமடைந்தனர்.

விழாவில் விஜய் நற்பணி இயக்க மாவட்டத் தலைவர் ஆர். பரணிபாலாஜி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» இயக்குனர் விஜய் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படத்தின் பெயர் ‘தலைவா’
» மும்பையில் சந்திக்க விஜய், அஜீத் திட்டம்
» வெள்ளிக்கிழமை… பெரிய படம் எதுவும் இல்லை!
» ரசிகர்களை திரட்டி மரக்கன்று நடும் திட்டம்: விஜய், அஜீத், சூர்யாவிடம் ஆதரவு கேட்பேன் – விக்ரம்
» அரசியல் பற்றி இப்ப எதுவும் கேட்க வேண்டாம் ப்ளீஸ்! விஜய்!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum