தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மும்பையில் சந்திக்க விஜய், அஜீத் திட்டம்

Go down

மும்பையில் சந்திக்க விஜய், அஜீத் திட்டம்  Empty மும்பையில் சந்திக்க விஜய், அஜீத் திட்டம்

Post  ishwarya Wed Mar 13, 2013 5:43 pm

விஜய், அஜீத் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடப்பதால் இருவரும் அங்கு முகாமிடுகின்றனர். விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படம் உருவாகி வருகிறது. இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இது அவர் நடிக்கும் 53வது படமாகும். ஆர்யா, ராணா, மகேஷ் மஞ்சுரேக்கர், அதுல் குல்கர்னி, நயன்தாரா, டாப்ஸி ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடக்கிறது. முதலில் ஆர்யா, நயன்தாரா, டாப்ஸி நடிக்கும் காட்சிகள் பாந்தரா பகுதியில் ஒரு வாரம் படமாகிறது.

அதன் பிறகு நடக்கும் ஷூட்டிங்கில் அஜீத் பங்கேற்கிறார். பெரும்பகுதி காட்சிகளை மும்பையில் படமாக்க இயக்குனர் திட்டமிட்டிருக்கிறார். அதேபோல் விஜய் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் ‘கிரீடம்’ விஜய். இப்படத்துக்கும் பெயரிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ‘தங்கமகன்’ என்று பெயர் வைக்க நினைத்தனர். ஆனால் ஏற்கனவே ரஜினி நடித்த படம் அதேபெயரில் வெளியாகி உள்ளது. இதையடுத்து வேறு தலைப்பு தேடிக்கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே வைத்த தலைப்பை வைக்காமல் புதிய தலைப்பாக வைக்கும்படி இயக்குனரிடம் கூறி இருக்கிறாராம் விஜய்.

இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு 30 நாட்கள் ஏற்கனவே மும்பையில் நடந்தது. இதையடுத்து அடுத்தகட்ட ஷூட்டிங் மும்பையில் தொடங்குகிறது. இதற்காக ஆர்ட் டைரக்டர் நாகராஜ் மும்பையில் உள்ள குறிப்பிட்ட ஒரு பகுதியை போன்ற செட் அமைக்கிறார். விஜய்யுடன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் சத்யராஜ். இவர்களுடன் ஆயிரம் துணை நடிகர்களும் நடிக்கின்றனர். அஜீத், விஜய் இருவரும் மும்பை ஷூட்டிங்கில் பங்கேற்கின்றனர். இருவரும் பரஸ்பரம் மரியாதை நிமித்தமாக படப்பிடிப்பு தளத்தில் சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ரசிகர்களை திரட்டி மரக்கன்று நடும் திட்டம்: விஜய், அஜீத், சூர்யாவிடம் ஆதரவு கேட்பேன் – விக்ரம்
» சென்னை, மதுரை, கோவையில் ரசிகர்களை சந்திக்க ரஜினிகாந்த் திட்டம் அரசியலில் குதிக்க ஆலோசனை?
» மும்பையில் 15 நாள் படப்பிடிப்பு: அஜீத், ஆர்யா இணைந்து நடிக்கின்றனர்
» அரசியல் பாதையில் விஜய் – ஜெயலலிதாவை சந்திக்க முடிவு?
» மும்பையில் விருந்து விஜய், பிரபுதேவாவுடன் அசின் சந்திப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum