தென்னையை தாக்கும் “பென்சில் பாயிண்ட்’ நோய்
Page 1 of 1

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தென்னையில் நுண்ணூட்ட சத்து குறைபாடால் “பென்சில் பாயிண்ட்’ என்ற புதிய நோய் ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தென்பெண்ணை ஆற்று படுகை பகுதிகள் உள்ளிட்ட பல பகுதிகளில், 16 ஆயிரம் ஹெக்டேரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஆற்று படுகை பகுதிகளான பாரூர், அரசம்பட்டி, புலியூர், பெண்டரஹள்ளி, கீழ்குப்பம், புங்கம்பட்டி, மருதேரி ஆகிய பகுதிகளில் அதிக அளவில் குட்டை மற்றும் நெட்டை ரக தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டாக தென்னையில் ஈரியோஃபைட் நோய் தாக்குதல் காரணமாக, தென்னை மரங்கள் அதிக அளவில் காய்ந்து வருகிறது.இதனால், தென்னை சாகுபடியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது, அரசம்பட்டி, பெண்டரஹள்ளி பகுதிகளில் தென்னை மரங்களை புது விதமான நோய் வேகமாக தாக்கி வருகிறது.
நோய் தாக்கிய மரங்களில் ஓலைகளின் அளவு குறைந்தும், மஞ்சள் நிறமாக மாறியும், மரங்களின் நுனியில் மரம் சிறுத்தும் காணப்படுகிறது.
மேலும் புதிய ஓலைகள் உருவாகாமல், 100 சதவீதம் தென்னை விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.
தகவல் அறிந்த பையூர் மண்டல வேளாண் ஆராய்ச்சி நிலைய தலைவர் மணி, நோயியல் நிபுணர் கல்பனா, வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) பச்சையப்பன். வேளாண் அலுவலர் வானதி உள்ளிட்ட குழுவினர் பெண்டரஹள்ளியில் நோய் தாக்கிய மரங்களை ஆய்வு செய்தனர்.
ஆய்வில், தென்னையில் நுண்ணூட்ட சத்து குறைவால் “பென்சில் பாயிண்ட்’ என்ற நோய் தாக்கியுள்ளது தெரிந்தது.
நோயை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து வேளாண் துறையினர் கூறியது:
இந்த நோயை கட்டுப்படுத்தாவிட்டால், தென்னை மரங்களின் நுனிகள் சிறுத்து அழிந்துவிடும்.
இதனை தடுக்க மரங்களுக்கு நுண்ணூட்ட சத்தை வேர் மூலம் வழங்க வேண்டும்நோய் தாக்கிய தோட்டங்களில் விவசாயிகள் ஒரு மரத்துக்கு யூரியா ஒரு கிலோ, டி.ஏ.பி., ஒரு கிலோ, பொட்டாஷ் ஒன்னரை கிலோ, வேப்பம் புண்ணாக்கு இரண்டில் இருந்து ஐந்து கிலோ வரையிலும், சூடோமோனோமாஸ் 200 கிராம், டிரைகோ டெர்மாவிரிடி 200 கிராம் ஆகியவற்றை சேர்ந்து கலவையாக கலந்து ஆறு மாதத்திற்கு ஒரு முறை இட வேண்டும்.
இவ்வாறு இரண்டு அல்லது மூன்று முறை செய்தால் நோயை முற்றிலும் கட்டுப்பத்தலாம்.
நோயை கட்டுப்படுத்துதல் குறித்து விவசாயிகள் அந்தந்த பகுதி வேளாண் அலுவலர்களை அணுகி தெரிந்து கொள்ளலாம்

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» தென்னையை தாக்கும் “பென்சில் பாயிண்ட்’ நோய்

» பெண்களை தாக்கும் இதய நோய்
» பெண்களைத் தாக்கும் இதய நோய்
» பெண்களை தாக்கும் நீரிழிவு நோய்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum