சமையல்:ஸ்வீட் அண்ட் ஸோர் சிக்கன் ப்ரம்ஸடிக்ஸ்
Page 1 of 1
சமையல்:ஸ்வீட் அண்ட் ஸோர் சிக்கன் ப்ரம்ஸடிக்ஸ்
தேவைப்படும் பொருட்கள் :
முட்டை - 1
சோள மாவு - 5 மேஜைக் கரண்டி
உப்பு - தேவையான அளவு
மிளகுத் தூள் - தேவையான அளவு
கோழிக் கால்கள் - 6
சோயா ஸாஸ் - 1 மேஜைக் கரண்டி
சமையல் எண்ணெய் - தேவையான அளவு
வெங்காயம் - 1 பெரியது
மிளகாய் - 1
கேரட் - 1
வினிகர் - 4 மேஜைக் கரண்டி
ஷெர்ரி - 1 மேஜைக் கரண்டி
சர்க்கரை - 4 மேஜைக் கரண்டி
இறைச்சி வேக வைத்த நீர் - 1/4 லிட்டர்
கோழிக்கறி - 100 கிராம்
முன்னேற்பாடு - 1
முட்டையை நுரை பொங்கும்படி அடித்து ஒரு பாத்திரத்தில் ஊற்றவும்
அதில் சிறிதளவு நீர் ஊற்றவும். நன்றாகக் கலக்கி விடவும்
முன்னேற்பாடு - 2
ஒரு பாத்திரத்தில் மூன்று மேஜைக் கரண்டி அளவு சோள மாவைப் போடவும். அதில் சிறிதளவு உப்பு, மிளகுத் தூள் சேர்க்கவும். நன்றாகக் கலக்கிக் கொள்ளவும்.
முன்னேற்பாடு - 3
இப்போது அடித்து வைத்திருக்கும் முட்டையில் இந்தச் சோளமாவுக் கலவையைத் தூவவும். கட்டியின்றிக் நன்றாகக் கலக்கவும்.
முன்னேற்பாடு - 4
கோழிக் கால்களை நன்றாகக் கழுவிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு நீர் விட்டு வேக விடவும்.
முன்னேற்பாடு - 5
கோழிக் கால் வெந்தவுடன் முட்டையில் போட்டுத் தோய்க்கவும். கோழிக் காலில், முட்டையானது கெட்டியாகப் பற்றும் வரைத் தோய்த்த பின்னர் அதை ஒரு பாத்திரத்தில் உள்ள சோயா ஸாஸில் நன்றாகப் புரட்டிக் கொள்ளவும்.
முன்னேற்பாடு - 6
அடுப்பில் வாணலியை வைக்கவும். அதில் தேவையான அளவு சமையல் எண்ணெயை ஊற்றி காய்ந்தவுடன் தோய்க்கப்பட்ட கோழிக் கால்களைப் போடவும். கோழிக் கால்கள் பொன்னிறமாகப் பொரியும் வரை பொரிக்கவும்.
முன்னேற்பாடு - 7
பெரிய வெங்காயத்தை தோல் நீக்கவும். துண்டு, துண்டாக வெட்டிக் கொள்ளவும்.
முன்னேற்பாடு - 8
குடை மிளகாயைக் கழுவவும். துண்டு துண்டாக வெட்டிக் கொள்ளவும்.
முன்னேற்பாடு - 9
கேரட்டைக் கழுவவும். பொடிப் பொடியாக வெட்டிக் கொள்ளவும்.
முன்னேற்பாடு - 10
ஒரு பாத்திரத்தில் சிறிதளவு நீர் ஊற்றவும், கொதிக்க விடவும். இறக்கியதில் பெரிய வெங்காயத் துண்டுகளைப் போட்டு விடவும். கூடவே குடை மிளகாய்த் துண்டுகளையும் போடவும். அத்துடன் கேரட்டையும் போட்டு விடவும்
முன்னேற்பாடு - 11
கோழி நீரில் இக்கலவை ஐந்து நிமிடங்கள் வரை ஊறட்டும். பின்னர் கோழி நீரை வடிகட்டி வடித்து விடவும்
முன்னேற்பாடு - 12
நூறு மி.லி. கிராம் கோழிக் கறி வாங்கி வந்து அதை நன்றாகக் கொத்திக் கொள்ளவும். கழுவிக் கொள்ளவும். அதை வேக வைக்கவும். நன்றாகக் குழைந்து போகும்படியாக அதை வேக வைக்கவும். பின் அத் தண்ணீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். எஞ்சியிருக்கும் கோழிக்கறிச் சக்கையில் சிறிதளவு கொதி நீர் விட்டு மிக்ஸியில் விட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும். இப்போது கறியே இல்லாமல் சாறுமட்டும் தான் இருக்கும்.
இந்தச் சாறை வடிகட்டி வைத்துள்ள நீருடன் கலந்து வைத்துக் கொள்ளவும்
தயாரிப்பு முறை :
ஒரு வாணலியில் இந்த இறைச்சித் தண்ணீரை ஊற்றவும். அதில் வினிகரையும், ஷெர்ரியையும் போடவும். சர்க்கரையைக் கலக்கவும். சோயா ஸாஸையும் விடவும். பின்னர் சோள மாவு தூவவும். எல்லாவற்றையும் கரண்டியால் நன்றாகக் கலக்கவும். இதனை அடுப்பில் ஏற்றவும்.
சிறு தீயாக எரிய விடவும். பின்னர் இதைத் தொடர்ந்து கிளறி விடவும். இதன் பின்னர் நீர் கொதிக்கத் துவங்கும். அவ் வேளையில், வறுத்து வைத்திருக்கும் கோழிக் கால்களை அதில் கலக்கவும். தொடர்ந்து ஐந்து நிமிடங்கள் இவ்வாறு கிளறிக் கொண்டே இருக்கவும். பின் அடுப்பிலிருந்து இறக்கிப் பரிமாறவும்
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஹாட் அண்ட் ஸ்வீட் சாலட்
» ஸ்வீட் அண்ட் சோர் நூடுல்ஸ் சூப்
» ஸ்வீட் கார்ன் சிக்கன் சூப்
» சமையல்:போர்க் அண்ட் எக்ஸ்
» சமையல்:மஷ்ரூம்ஸ் அண்ட் காலிஃப்ளவர்
» ஸ்வீட் அண்ட் சோர் நூடுல்ஸ் சூப்
» ஸ்வீட் கார்ன் சிக்கன் சூப்
» சமையல்:போர்க் அண்ட் எக்ஸ்
» சமையல்:மஷ்ரூம்ஸ் அண்ட் காலிஃப்ளவர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum