சமையல்:மல்டி வெஜிடபிள் மசாலா கூட்டு
Page 1 of 1
சமையல்:மல்டி வெஜிடபிள் மசாலா கூட்டு
தேவையானவை
கத்தரிக்காய் - 100 கிராம்
தக்காளி - 100 கிராம்
காரட் - 50 கிராம்
பீட்ரூட் - 50 கிராம்
வெங்காயம் - 100 கிராம்
மிளகாய் வத்தல் - தேவைக்கேற்ப
மிளகு தூள் - கால் தேக்கரண்டி
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 1
மஞ்சள் பொடி - கால் தேக்கரண்டி
சீரகம் - கால் தேக்கரண்டி
பட்டை - 1 சிறுதுண்டு
சோம்பு - கால் தேக்கரண்டி
கசகசா - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி கடுகு, கறிவேப்பிலை,
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
காரட், கத்தரிக்காய், தக்காளி, பீட்ரூட் இவைகளை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக அரிந்து, சிறிது எண்ணெய் ஊற்றி, வதக்கி எடுக்கவும். இரண்டு தம்ளர் தண்ணீரில் காரட், பீட்ரூட், இரண்டையும் வேகவைக்கவும். பாதிவெந்ததும், அத்துடன், தக்காளி, கத்தி ரிக்காய் சேர்த்து வேகவிடவும். இவை நன்கு வெந்ததும் இறக்கி வைக்கவும். இது, மல்டி வெஜிடபிள் கலவை. மிளகாய் வத்தல், மிளகுதூள், இஞ்சி, பூண்டு, மஞ்சள்பொடி, சீரகம், பட்டை, சோம்பு, கசகசா இவைகளைச் சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து, மிக்ஸியிலிட்டு மைபோல் அரைத்து எடுக்கவும். இது மசாலா கலவை. இத்துடன் இரண்டு தம்ளர் தண்ணீர் சேர்த்து, நன்கு கலந்துகொள்ளவும். பின்னர் மல்டி வெஜிடபிள் கலவை, வதக்கிய வெங்காயம், இவைகளைச் சேர்த்து உப்பிட்டு, கலந்து, கொதிக்க வைக்கவும். பாதியளவு, நீர் சுண்டியதும், கடுகு, கறிவேப்பிலை, தாளித்திட்டு இறக்கவும். இதுவே மல்டி வெஜிடபிள் மசாலா கூட்டு மிகவும் சுவையாக இருக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சமையல்:மல்டி பொடி சாதம்
» மிக்ஸ்டு வெஜிடபிள் கூட்டு
» சமையல்:ஓட்ஸ் வெஜிடபிள் உப்புமா
» சமையல்:வெஜிடபிள் மிக்ஸ்
» சமையல்:வெஜிடபிள் உருண்டை
» மிக்ஸ்டு வெஜிடபிள் கூட்டு
» சமையல்:ஓட்ஸ் வெஜிடபிள் உப்புமா
» சமையல்:வெஜிடபிள் மிக்ஸ்
» சமையல்:வெஜிடபிள் உருண்டை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum