டெல்டாவில் ஏகபோக கொள்முதல் தடுக்க வர்த்தக சங்கம் ஆர்ப்பாட்டம்
Page 1 of 1

கும்பகோணம்: டெல்டா மாவட்டங்களில் ஏகபோக நெல், அரிசி கொள்முதலை தடை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
டெல்டா மாவட்டங்களில் ஏகபோக நெல், அரிசி கொள்முதலை தடை செய்ய வலியுறுத்தி, கும்பகோணம் காந்தி பார்க் முன் வர்த்தக சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், தஞ்சை மாவட்ட நெல் அரிசி வியாபாரிகள் சங்க செயலாளர் சேகர் தலைமை வகித்து பேசியதாவது:
காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில், பாசனத்துக்கு உரிய காலத்தில் தண்ணீர் இல்லாதபோதும், மழை இல்லாத நிலையிலும், மும்முனை மின்சாரம் இல்லாமல் கடுமையான போராட்டத்துக்கு இடையே, விவசாயிகள் பம்புசெட்கள் மூலம் சம்பா நெல் சாகுபடி செய்துள்ளனர். முன்பட்ட சம்பா அறுவடை நடந்து வரும் நிலையில், பல இடங்களில் லாரிகளை கொண்டு வந்து, நேரடி நெல் கொள்முதல் செய்ய துவங்கிவிட்டனர். வியாபாரிகள், விவசாயிகளிடம் இருந்து நேரிடையாக, ரிலையன்ஸ் நிறுவனம் ஏகபோக கொள்முதல் செய்து, நெல்லை பதுக்கி வைக்க திட்டமிட்டுள்ளனர்.
இதன் மூலம் செயற்கையான அரிசி தட்டுப்பாடும், விலை ஏற்றமும் நடந்து வருகிறது. எனவே ஏகபோக நெல், அரிசி கொள்முதல், அளவுக்கு அதிகமாக பதுக்கி வைப்பதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
வணிகர் சங்க பேரவை மாவட்ட தலைவர் கணேசன், செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தனர். தொகுதி செயலாளர் முத்துராஜா, இந்திய மனித உரிமைகள் பாதுகாப்பு கழக மாநில பொறுப்பாளர் திருவேங்கடம் மற்றும் வர்த்தக சங்க பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். துணைத்தலைவர் சத்தியமூர்த்தி நன்றி கூறினார்.
அன்னிய நேரடி முதலீட்டை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும், உணவு தர நிர்ணய சட்டத்தை முறைப்படுத்த வேண்டும், வால்மார்ட் நிறுவனம் சென்னையில் கட்டடங்கள் கட்டுவதை நிறுத்த வேண்டும், அரிசி விலை ஏற்றத்துக்கு மிக முக்கிய காரணமான, ஏகபோக கொள்முதலை தடுக்க வேண்டுமென வலியுறுத்திம் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» டெல்டாவில் ஏகபோக கொள்முதல் தடுக்க வர்த்தக சங்கம் ஆர்ப்பாட்டம்
» பிளவுபட்டது நடனக் கலைஞர்கள் சங்கம்! பிறந்தது புதிய சங்கம்!!
» வர்த்தக மையத்தில் மருத்துவ கண்காட்சி
» யாருக்கு வர்த்தக யோகம் கிடைக்கும்?
» வர்த்தக காணிகள் ஒதுக்கீட்டில் யாழ். மாநகரசபை முறைகேடு?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum