வர்த்தக காணிகள் ஒதுக்கீட்டில் யாழ். மாநகரசபை முறைகேடு?
Page 1 of 1

இலங்கையின் வடக்கே யாழ். மாநகராட்சி மன்றத்தின் சபையை விசேடமாகக் கூட்ட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் 8 பேர் சபை முதல்வரிடம் அவசர கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள்.
யாழ். மாநகர சபை கடந்த நான்கு வருடங்களாக ஆளும் ஐக்கிய சுதந்திர மக்கள் முன்னணியின் கூட்டுக் கட்சியாகிய ஈபிடிபி கட்சியின் பெரும்பான்மை பலத்துடன் கூடிய தலைமையில் நடந்து வருகின்றது.
தொடர்புடைய விடயங்கள்
துஷ்பிரயோகம்,
தமிழ் தேசியக் கூட்டமைப்பு
இந்த நிலையில் சபைக்குச் சொந்தமான காணிகள் நடைமுறைக்கு மாறாக வர்த்தகத் தேவைகளுக்காகக் கொடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் விவாதிப்பதற்காகவே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக அந்த சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் அரியகுட்டி பரஞ்சோதி தெரிவித்திருக்கின்றார்.
கடந்த நான்கு வருடங்களாக பல காணித் துண்டுகளை சிறு வர்த்தகத் தேவைகளுக்காக சபையின் முறையான அனுமதியைப் பெறாமல், சபை முதல்வர் தனது சொந்த விருப்பத்திற்கு ஏற்ப கொடுத்து வருவதாக அவர் குற்றம் சுமத்தியிருக்கின்றார்.
இவ்வாறு காணிகள் மற்றும் கடைகள் கொடுக்கப்பட்டுள்ளவர்கள் யாழ். மாநகர சபையின் எல்லைக்கு வெளியில் வசிப்பவர்கள் என்றும் அவர்கள் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் கூறியிருக்கின்றார்.
இது தொடர்பான உண்மையான விடயங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று தமது கோரிக்கையில் தெரிவித்திருப்பதாகவும் அவர் கூறினார்.
எனினும் இந்த விடயம் குறித்து யாழ். மாநகரசபையின் முதல்வரின் கருத்துக்களை உடனடியாகப் பெற முடியவில்லை.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» யாழ். மாநகரசபை எல்லை தெரியாத ரீஎன்ஏ மாநகரசபை உறுப்பினர்.
» மருத்துவதுறையில் முறைகேடு…! பார்லிமென்ட்டில் உரையாற்றுகிறார் அமீர்கான்!!
» டெல்டாவில் ஏகபோக கொள்முதல் தடுக்க வர்த்தக சங்கம் ஆர்ப்பாட்டம்
» யாருக்கு வர்த்தக யோகம் கிடைக்கும்?
» வர்த்தக மையத்தில் மருத்துவ கண்காட்சி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum