வர்த்தக மையத்தில் மருத்துவ கண்காட்சி
Page 1 of 1
வர்த்தக மையத்தில் மருத்துவ கண்காட்சி
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், ஆரோக்யா 2010 மருத்துவ கண்காட்சியை அமைச்சர் அன்பழகன் நேற்று தொடங்கி வைத்தார். இதில், இலவச மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்துகள் வழங்கப்படுகின்றன.
தமிழக அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையும், மத்திய அரசின் ஆயுஷ் துறையும் இணைந்து சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், ஆரோக்யா 2010 என்ற மருத்துவ கண்காட்சிக்கு ஏற்பாடு செய்து உள்ளன. கண்காட்சியை அமைச்சர் அன்பழகன் நேற்று தொடங்கிவைத்து பேசினார். விழாவுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்.
கண்காட்சி கையேட்டை, மத்திய அமைச்சர் எஸ்.காந்தி செல்வன் வெளியிட்டு பேசினார். இந்திய வர்த்தக மேம்பாட்டு நிறுவனத்தின் பொது மேலாளர் நசீம் இஸ்ஹாக், மத்திய அரசின் ஆயுஷ் துறையைச் சேர்ந்த ஆயுர்வேத முறை ஆலோசகர் டாக்டர் எஸ்.கே.சர்மா, தமிழக அரசு சுகாதாரத்துறை செயலாளர் வி.கே.சுப்புராஜ் ஆகியோர் கண்காட்சியின் அவசியம் பற்றி பேசினார்கள்.
முன்னதாக இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் முதன்மைச் செயலாளர் மற்றும் ஆணையர் ரமேஷ் குமார் கன்னா வரவேற்று பேசினார். இணை இயக்குநர் (பொறுப்பு) டாக்டர் ஏ.எம்.அப்துல் காதர் நன்றி தெரிவித்து பேசினார்.
விழாவில், சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக்கல்லூரி மாணவர்களின் யோகா நேரடி செய்முறை விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த கண்காட்சி 30-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில், மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மருந்துகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. தினசரி மருத்துவ சொற்பொழிவுகள், யோகாசன செய்முறை விளக்கம், மூலிகை கண்காட்சி, ஓலைச்சுவடி கண்காட்சி, மருத்துவ நூல் கண்காட்சி ஆகியவைகளுக்கான அரங்குகளும் அமைக்கப்பட்டு உள்ளன.
கண்காட்சியைக் காணவரும் பொதுமக்களுக்கு மருத்துவ வினாடி-வினா நிகழ்ச்சி நடத்தவும் விழாக்குழுவினர் ஏற்பாடு செய்து உள்ளனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மகத்தான கண்காட்சி
» யாருக்கு வர்த்தக யோகம் கிடைக்கும்?
» ஆன்மிக புத்தகங்கள் கண்காட்சி
» இயற்கை வேளாண் கண்காட்சி
» இயற்கை வேளாண் கண்காட்சி
» யாருக்கு வர்த்தக யோகம் கிடைக்கும்?
» ஆன்மிக புத்தகங்கள் கண்காட்சி
» இயற்கை வேளாண் கண்காட்சி
» இயற்கை வேளாண் கண்காட்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum