சமையல்:சர்க்கரை வள்ளிக்கிழங்கு லாலிபாப்
Page 1 of 1
சமையல்:சர்க்கரை வள்ளிக்கிழங்கு லாலிபாப்
தேவையானவை:
சர்க்கரை வள்ளிக்கிழங்கு - 1/4 கிலோ
இஞ்சி, பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
வினிகர் - 1/2 (அ) 3/4 டேபிள் ஸ்பூன்
மைதாமாவு - 2 டேபிள்ஸ்பூன்
தக்காளி கெட்சப் - 3 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
சர்க்கரை வள்ளிக்கிழங்கை கழுவி, தோல் சிவி, பெரிய துண்டுகளாக நறுக்கவும். ஒரு மைக்ரோ ப்ரூஃப் பாத்திரத்தில் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், வினிகர், மைதாமாவு, தக்காளி கெட்சப், உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு நன்றாக கலக்கவும். இதில் சர்க்கரை வள்ளிக்கிழங்கு துண்டுகளைப் போட்டுக் கிளறி ஒரு மணி நேரம் ஊற விடவும்.
ஒரு மைக்ரோ ப்ரூஃப் தட்டில் எண்ணெய் தடவி, மைக்ரோ + க்ரில் காம்பினேஷன் மோடை உபயோகப்படுத்தி (70% பவரில்) 2 நிமிடம் ப்ரீ ஹீட் செய்யவும். பிறகு அந்த மைக்ரோ தட்டில் மசாலாவில் ஊறிய சர்க்கரை வள்ளிக்கிழங்கை பரத்தி அதே காம்பினேஷனில் 12 நிமிடம் வேக வைக்கவும். 8 நிமிடத்துக்கு ஒருமுறை துண்டுகளை கிளறவும். 10லிருந்து 15 நிமிடத்துக்குள் தயாராகிவிடும் இந்த லாலிபாப்.
சூடாக இருக்கும்போதே "டூத் பிக்ஸ்" குச்சியை சொருகி குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சர்க்கரை வள்ளிக்கிழங்கு லாலிபாப்
» சமையல்:சர்க்கரை வள்ளிக்கிழங்கு - பீட்ரூட் பரோட்டா
» இன்றைய சமையல் சீரக சாதம் – சமையல் குறிப்பு
» சர்க்கரை வள்ளிக்கிழங்கு போளி
» சர்க்கரை வள்ளிக்கிழங்கு - பீட்ரூட் பரோட்டா
» சமையல்:சர்க்கரை வள்ளிக்கிழங்கு - பீட்ரூட் பரோட்டா
» இன்றைய சமையல் சீரக சாதம் – சமையல் குறிப்பு
» சர்க்கரை வள்ளிக்கிழங்கு போளி
» சர்க்கரை வள்ளிக்கிழங்கு - பீட்ரூட் பரோட்டா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum